Alliance talks with Vijay? - Mansoor Ali Khan's sensational interview Photograph: (POLITICS)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகரும், ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகானிடம் 'விஜய் வருகையால் ஓட்டு பிரியும் என்று பார்க்கிறீர்களா?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''அரசியலுக்கு யாரும் வரலாம். நாங்களும் வரலாம். விஜய்யும் வரலாம். அதில் கணிப்பதற்கு எல்லாம் நான் ஒன்றும் இல்லை. மக்கள் ஓட்டு போட்டால் விஜய் ஜெயிப்பார். ஏன் விஜய் வரக்கூடாதா? வரட்டும். விஜய் கட்சியுடன் கூட நாங்கள் கூட்டணி அமைப்போம். ஜனநாயகன் படம் வெளிவராததற்கு என் ஆதங்கத்தை கமலா தியேட்டரில் சொன்னேன். விஜய் வெளிப்படையாக இறங்கி கால் தடம் பதிக்க வேண்டும். மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். உழைக்க வேண்டும் என்று நான் சொன்னேன். நான் எப்பொழுதும் நியாயத்தை தான் பேசுபவன். இப்பொழுதும் அதைத்தான் சொல்கிறேன்.
இப்பொழுது விஜய் கஷ்டப்பட்டு உழைக்கிறார். ரசிகர்கள் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் நன்றாக பேசி வருகிறார்கள். விஜய் வரட்டும். விஜய்யின் விவாகரத்து என்பது அவர்களின் இருவருக்கும் உள்ளான பிரச்சனை. வீட்டுக்கு வீடு வாசப்படி. அதை எதிர்க்க நீங்கள் தூண்டுகிறீர்கள். அது வழக்கு போட்டுள்ளார்கள். விசாரணை நடைபெற இருக்கிறது. அதுதான் சட்டம் சொல்கிறது. பொதுவெளியில் இதை பேசுவதை அயோக்கியத்தனம். அவர்கள் அடித்துக் கொள்கிறார்கள், பிடித்துக் கொள்கிறார்கள், கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள். அது அவருடைய இஷ்டம். உனக்கு எதுக்குப்பா?
டிரம்ப் சின்ன சின்ன குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு விளையாட்டு செய்து கொண்டிருக்கிறார் அவர்கள் மீதெல்லாம் உங்களுடைய கண்ணு போகாது. இனிமேல் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதற்காகத்தான் கூட்டம் போட்டுள்ளோம். நாங்கள் யாரிடம் போய் தொங்கும் ஆட்கள் கிடையாது. என்னை பற்றி மக்களுக்கு தெரியும். ஜனநாயக புலிகள் கட்சி நாங்கள் தனிக்காட்டு ராஜா. இந்த பூமிப் பந்தையே ரொம்ப கொடூர படுத்துகிறார்கள். நாம் எல்லாம் இப்பொழுது சந்தோஷமாக இருக்கிறோம். எவ்வளவு பெரிய அணுகுண்டுகள், வெடிகுண்டுகள் கடலுக்குள் போடுகிறார்கள். கண்ணில் சின்ன தூசி விழுந்து விட்டால் எவ்வளவு பாதிக்கப்படுகிறோம். ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து ஒரு உயிரை காப்பாற்றுவதற்கு 28 மணி நேரம் 10 டாக்டர்கள் சேர்ந்து ஒரு உயிரைக் காப்பாற்ற போராடுகிறார்கள். ஆனால் மனித பிணங்கள், காட்டுமிராண்டிகள் நெதன்யாகு என்பவரெல்லாம் எல்லாம் இந்த நேரத்தில் சாகடிக்கப்பட்டு இருக்க வேண்டும். கிறிஸ்டின் முஸ்லிம் என்பதை வைத்து பேசவில்லை. மனித இனத்திற்கு எதிரான பிணந்தின்னி நாதாரிகள் இந்த இரண்டு பேரும். வெளிப்படையாக நான் குற்றம் சுமத்துகிறேன். இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது. அதில் நமது இந்தியாவின் பாரம்பரியமே இல்லை. ஆதிகாலம் தொட்டு இஸ்ரேல் என்பது எதிரி நாடு. தவறாக உருவாக்கப்பட்ட நாடு. அங்கு மோடி போய் ' நாங்கள் எல்லாமே உங்கள் பக்கம் என்று சொன்னால் அது ஒன்றாம் நம்பர் அயோக்கியத்தனம். இது மக்களுக்கு தெரியும்''என்றார்.
Follow Us