தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் தான் திமுக இதுவரை தங்களை கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்திருந்தார்.
அதோடு திமுகவின் பதிலுக்காக இரண்டு மாதங்களாக காத்திருக்கிறோம் என தெரிவித்திருந்த அவர், ''கூட்டணி பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கிறது. டிசம்பர் 3 ஆம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தோம். அதன் பிறகு டிசம்பர் 15ஆம் தேதிக்குள் கூட்டணியை இறுதிச் செய்ய கோரி இருந்தோம். எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. ஆனால் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை. திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம் எனத் தெரியவில்லை. திமுகவின் பதிலுக்காக இரண்டு மாதங்களாக காத்திருக்கிறோம் என ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கிரிஷ் ஜோடங்கர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லி செல்லும் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி, நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி எம்.பி.யை இன்று (28.01.2026) சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது இரு கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/28/congress-3m-team-2026-01-28-10-08-01.jpg)
அதிலும் குறிப்பாகக் காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறித்தும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்து குறித்தும் ராகுல் காந்தியிடம் கனிமொழி தெரிவிக்க உள்ளார். அதன் பின்னர் ராகுல் காந்தி தெரிவிக்கும் கருத்துக்களை, திமுகவின் மூத்த தலைவர்களிடம் கனிமொழி தெரிவிக்க உள்ளார்.
Follow Us