இன்று  தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் முக்கிய நிர்வாகி சி.டி.நிர்மல்குமார் பேசுகையில், ''எங்களுடைய பொதுச்செயலாளர் தலைமையிலும், சமீபத்தில் எங்களுடன் இணைந்த தீர்மானக் குழுவின் தலைவராக இருக்கும் செங்கோட்டையன் முன்னிலையிலும் இன்று அந்த கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். அடுத்த மூன்று மாதங்களில் நடக்க வேண்டிய தேர்தல் பணி குறித்து, எவ்வாறெல்லாம் நிர்வாகிகள் செயல்பட வேண்டும்? என்னென்ன விதத்தில்  தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்? என்னென்ன சவால்கள் நம் முன்னே இருக்கிறது? அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? எந்த அளவிற்கு நமக்கு பொதுமக்கள் ஆதரவு இருக்கிறது. அதை முடக்க திமுக என்னவெல்லாம் செய்கிறது? அதை எதிர்கொண்டு எப்படி தேர்தலை சந்திக்க வேண்டும் போன்ற அனைத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisment

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை குழு குறித்து விஜய் முடிவெடுத்து விரைவில் அறிவிப்பார். கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பிக்க இன்னும் நாட்கள் இருக்கிறது. எங்களுடைய தலைவரை (விஜய்யை) முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும். அதுபோல கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழுக்கள் அமைக்கப்படும். இதெல்லாம் முடிவெடுத்த பிறகு எங்களுடைய தலைவர் வாயிலாக அது அறிவிக்கப்படும். கூட்டணி முடிவுகள் எதுவாக இருந்தாலும் தலைவர் வாயிலாக அறிவிக்கப்படும்.

மக்கள் சந்திப்பு குறித்த சவால்கள் எல்லா கட்சிகளுக்கும் இருக்கிறது. காவல்துறை ரீதியாகவும், நிர்வாகக் குழு ரீதியாகவும் நிறைய சிக்கல்கள் எங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. மற்ற எல்லாக் கட்சியும் நடத்துறாங்க. திமுக இதை ஏன் செய்கிறது என எல்லோருக்கும் தெரியும். கண்டிப்பாக மக்களிடத்தில் பெரிய ஆதரவு இருக்கிறது. இதை மக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்காங்க. எந்தெந்த வகையில் எங்களுக்கு எல்லாம் முட்டுக்கட்டை போடுறாங்க. எந்தெந்த வகையில் எங்களுடைய பிரச்சாரங்களை தடுக்கிறார்கள். எல்லாத்தையும் கடந்து கண்டிப்பாக மக்களை நாங்கள் சந்திப்போம்'' என்றார்.

Advertisment