பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கு இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில் கடந்த 19ஆம் தேதி பாமகவின் தலைமை அலுவலகமான தைலாபுரம் தோட்டத்தில் கூடிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்ததோடு, குற்றச்சாட்டுகளுக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அன்புமணி பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்த கெடுவானது நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இதுவரை அன்புமணி தரப்பில் எந்த வித பதில்களும் கொடுக்கப்படவில்லை. செப்டம்பர் ஒன்றாம் தேதி வரும் திங்கட்கிழமை ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் கூட இருக்கிறது. அதற்கு முன்னதாக நாளை ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் பாமக சமூக ஊடகப் பேரவை கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என ஆறு நாட்கள் தொடர்ச்சியாக தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற இருக்கிறது.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பதற்கான முடிவுகள் இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.