தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் இன்று (02.02.2026) நடைபெற்றது. இதில் விஜய் பேசுகையில், “இன்றைக்கு இந்த டிஜிட்டல் உலகத்தில் திருவள்ளுவர் இருந்திருந்தால் தீய சக்தியைப் பற்றி என்ன திருக்குறள் எழுதி இருப்பார். கற்பனையா கூறுகிறேன். அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு (ஒன்ஸ்மோர் கேட்ட தொண்டர்களுக்கு மீண்டும் மீண்டும் கூறினார்)” எனத் தெரிவித்தார்.  

Advertisment

மேலும் தொடர்ந்து பேசுகையில், “சிஎம் சார்....ஸ்டாலின் சார் ஒரு வருடத்திற்கு முன்பு என்று நினைக்கிறேன். ஒரு மேடையில் பேசும்போது சொன்னார். என்னுடைய கட்சி  கட்சிக்காரர்களில் சில பேர் செய்கிற அட்ராசிட்டி, ஒரு சில மந்திரிகள் செய்கிற சில அட்ராசிட்டிஸ் எல்லாம் பார்த்து  இரவில் எனக்குத் தூக்கமே வரமாட்டேங்குது என்று  சொன்னார். அப்படி இருக்கிற அவர் என்னைக்காவது ஒரு நாள் அசந்து தூங்கும்போது அவர் கிட்டச் சார் சார் எந்த சின்னத்துக்குச் சார் ஓட்டுப் போடுவீர்கள் என்று கேட்டுப் பாருங்கள். 

Advertisment

தூக்கத்தில் டப்புன்னு எழுப்பிக் கேட்டால், விசில் சின்னத்துக்குத்தான் என்று  உன்மையைப் போட்டு உடைத்திடுவார்” எனப் பேசினார். அதனைத் தொடர்ந்து பேசுகையில், “இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தான் மக்களோட ஒரே ஆப்ஷன். மற்றபடி (அதர்வைஸ்) நோ டைவர்ஷன். இந்த டப்பா இன்ஜின் ஓட்டை இன்ஜின் எவ்வளவு இன்ஜின் வந்தாலும் டாப் இன்ஜின் த.வெ.க. தான். மக்கள் ஆல்ரெடி முடிவு செய்து விட்டார்கள்” எனப் பேசினார்.