All the gates of the High Court are closed - a British practice that is still in effect today Photograph: (high court)
சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்று இரவு எட்டு மணிக்கு மூடப்பட்ட நிலையில் நாளை இரவு 8 மணி வரை அடைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றம் கட்டப்பட்ட பொழுது பாரிமுனை, ஜார்ஜ் டவுன், பூக்கடை பகுதிகளுக்கு நடுவே ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உயர் நீதிமன்றத்தை நிறுவினர். அந்த காலகட்டத்தில் அந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் புதிதாக கட்டப்பட்ட உயர்நீதிமன்றத்தைச் சுற்றியே மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பல்வேறு இடங்களுக்கு உயர்நீதிமன்றத்தை சுற்றி பல கிலோமீட்டர் செல்ல வேண்டும் என்பதால் உயர்நீதிமன்றத்தின் வளாகத்திற்கு உள்ளேயே வழிப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.
இதை கவனித்து வந்த நீதிமன்ற நிர்வாகம் மக்கள் தொடர்ந்து நீதிமன்றத்தின் பாதையை பயன்படுத்துவதால் பின்னாலில் பொது வழிக்கு உரிமை கோரலாம் என்பதால் வருடத்தில் ஒருநாள் மட்டும் நீதிமன்றத்தின் அனைத்து வழிகளையும் அடைக்க முடிவெடுத்தது. அதன்படி ஒவ்வொரு வருடமும் நவம்பர் இறுதி வாரத்தில் வரும் சனிக்கிழமையில் நீதிமன்றத்தின் அனைத்து வழிகளும் சனிக்கிழமை இரவு எட்டு மணி முதல் அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை மூடி வைக்கும் நடைமுறையானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு 8 மணிக்கு மூடப்பட்ட நீதிமன்றத்தின் வாயில்கள் நாளை இரவு 8 மணிக்கு திறக்கப்பட உள்ளது.
Follow Us