தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் பல இடங்களில் விட்டுவிட்டு மழை பொழிந்து வந்த செய்த நிலையில் சென்னை ராயபுரம் பகுதியில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பின் சென்னை மேயர் ப்ரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மேயர் ப்ரியா, ''வரக்கூடிய பருவமழையை முன்னிட்டு பொதுமக்களுடன் இணைந்து ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், மாமன்ற உறுப்பினரும் இருக்க வேண்டுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் ஆறு சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. துணை முதல்வர் நேரில் சென்று ஒவ்வொரு பகுதியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இன்று காலை மாநகராட்சி சார்பாக உணவு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டிருக்கிறது. இன்று மதிய உணவும் கிட்டத்தட்ட 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தேவையான இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இத்துடன் மழை இல்லை என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வருகின்ற 25ஆம் தேதி மீண்டும் மழை இருக்கும் என தெரிவித்திருக்கிறார்கள். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சி ஒவ்வொரு பகுதிகளும் 215 இடங்களில் லோ லைன் ஏரியா என கண்டறியப்பட்டு இருக்கிறது. இதில் 150 பகுதிகளில் 100 ஹெச்பி கொள்முதல் கொன்ற மோட்டார்கள் கொண்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது''என்றார்.