தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் 2026ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களை எதிர்கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதே சமயம், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையமும் எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட பணிகள் மூலம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
இந்நிலையில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்குத் தேர்தல் பார்வையாளர்களை நியமித்து அகில இந்தியக் காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பிறப்பித்துள்ள உத்தரவில், “அஸ்ஸாம் மாநிலத்திற்கு பூபேஷ் பாகேல், டி.கே. சிவகுமார், பந்து திர்கி ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். கேரளா மாநிலத்திற்கு சச்சின் பைலட், கே.ஜே. ஜார்ஜ், இம்ரான் பிரதாப்கர்ஹி, கன்னையா குமார் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு முகுல் வாஸ்னிக், உத்தம் குமார் ரெட்டி, காசி முகமது நிஜாமுதீன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். மேற்கு வங்கத்திற்கு சுதிப் ராய் பர்மன், ஷகீல் அகமது கான், பிரகாஷ் ஜோஷி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி எம்.பி., வரும் 28ஆம் தேதி (28.01.2026) தமிழ்நாடு வருகிறார் எனத் தகவல் வெளியாகியிருந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/07/rahul-modi-2026-01-07-20-24-52.jpg)
அதாவது காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிராம கமிட்டி மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் கன்னியாகுமரியில் 28ஆம் தேதி நடைபெற உள்ள பாஜக கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்க உள்ளார். அந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களைப் பிரதமர் மோடி அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஒரே நாளில் ராகுல் காந்தியும், பிரதமர் மோடியும் தமிழகம் வர இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/07/aicc-kc-venugopal-announcement-2026-01-07-20-24-13.jpg)