அனைத்து ஜாதினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் (தமிழ்நாடு) சார்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில், “சுசீந்திரன் திருக்கோவிலில் தேரோட்டத்தின் போது அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மனோ தங்கராஜ் எதிராக வன்முறையை தூண்டும் வகையில் கோஷமிட்ட பாஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தமிழ்நாடு சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். திருப்பரங்குன்றத்தில் தொடங்கி, தமிழ்நாட்டின் பல ஆலயங்களுக்குள் வரை மத அரசியலைத் தூண்டும் முயற்சிகள் இவை பக்தியின் பெயரில் செய்யப்படும் அரசியல் அத்துமீறல்கள்.
பாஜ.க., ஆர்.எஸ்.எஸ்., ஆலயங்களை அரசியல் மேடையாக மாற்றி, மக்களின் நம்பிக்கையைப் பிளக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன. கருவறையில் தமிழனும் தமிழும் பூஜை செய்ய மறுப்பு. இது ஆன்மீகமா? அல்லது அதிகார மேன்மை அரசியலா?. ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சமூக நீதித் திட்டத்தை முடக்க நினைப்பது— பக்தி அல்ல. சாதி ஆதிக்கத்தின் அரசியல். இன்று பல்வேறு இடங்களில் இந்துக்கள் என்று கோஷமிடும் இவர்கள் அனைத்து சாதியினர் அர்ச்சகர் பயிற்சி முடித்து 20 ஆண்டுகளாக காத்திருக்கும் இந்து மாணவர்களுக்கு கோஷம் எழுப்பாதது ஏன்?
கோயில் கருவறையில் வர்ணாசிரம மனுதர்ம அடிப்படையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று பாஜ.க., ஆர்.எஸ்.எஸ். நிலைநாட்டி வருகிறது. கோவில்களில் சமத்துவ சமூக நீதியை நிலைநாட்ட மறுப்பது ஏன்?. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறையை அகற்ற முயற்சிகள் நடப்பது ஆலயங்களை மக்கள் கண்காணிப்பிலிருந்து விலக்கி, அரசியல் பிடியில் சிக்க வைக்கும் சதியா?. இந்திய அளவில், மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க கிறிஸ்துவ ஆலையங்களும், முஸ்லிம் மசூதிகளும் கூட பிளவு அரசியலுக்கான கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. இது மதத்தின் பாதுகாப்பா? அல்லது வெறுப்பின் வியாபாரமா?.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/02/sekarbabu-mic-2026-01-02-21-54-39.jpg)
தாணுமாலயன் கோவில் — ஆன்மீகத்தின் மையத்தில் வீர சாவர்க்கர் கோஷம் எதற்கு? காந்தியைச் சுட்ட சிந்தனைக்கும் சைவ – வைணவ– சாக்த ஒருமைப்பாட்டுக்கும் என்ன சம்மந்தம்? சாவர்க்கர் கோஷம் 100% பா.ஜ.க.வின் மதவெறி அரசியலே. இதில் பக்தி எங்கே? இது வெறும் வெறுப்பையும் பிரிவையும் விதைக்கும் அரசியல். ஆலயங்கள் மனிதத்தை இணைக்க வேண்டும். அங்கே அரசியல் கோஷங்கள் அல்ல. அமைதியும் சமத்துவமும் தான் ஒலிக்க வேண்டும். மதத்தை அரசியலுக்குள் இழுப்பதும், ஆலயங்களை வெறுப்பின் மேடையாக்குவதும் சமூக அமைதிக்கான குற்றம். ஆலயங்களை அரசியலுக்குள் இழுப்பது அபத்தம். மதவெறி செயலில் ஈடுபடும் அமைப்புகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2026/01/02/hindu-temple-presit-ai-image-2026-01-02-21-53-50.jpg)