Alert for three districts Photograph: (rain)
கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் அங்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழிந்து வருகிறது. அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் மழை பொழிந்து வருகிறது. இன்று 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அறிவிப்பின்படி தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் வரத்து 65,000 கன அடியில் இருந்து 70,000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கர்நாடகாவை ஒட்டியுள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தடை இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.