கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் அங்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழிந்து வருகிறது. அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் மழை பொழிந்து வருகிறது. நேற்று நீலகிரி, சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது. இன்று 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெளியான அறிவிப்பின்படி நீலகிரி, தேனி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மிதமான மழைக்கும் வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் நிலையில் தர்மபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20,000 கன அடியில் இருந்து 28,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.