16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது, அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் இரவு 7:00 மணி வரை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், சென்னை, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழிந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டினம், பர்கூர், ஜெகதேவி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. குற்றால அருவிகள் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. திருப்பத்தூரில் நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், சத்துவாச்சாரி, காட்பாடி, லத்தேரி, வள்ளிமலை, தொரப்பாடி உள்ளிட்ட இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நீலகிரியில் கூடலூர் மற்றும் உதகையில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. தேவாலா பகுதியில் கனமழை பொழிந்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரியை மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.
காஞ்சிபுரத்தில் செவிலிமேடு, பேருந்துநிலையம், ஒரகடம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. ராணிப்பேட்டையில் பல இடங்களில் இடி மின்னலுடன் மழை பொழிந்து வருகிறது. ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, கலவை, விஷாரம், நெமிலி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. காவேரிப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம், பனப்பாக்கம் உள்ள பகுதிகளிலும் மிதமான மழை பொழிந்து வருகிறது.