Advertisment

தஞ்சையில் ஆசிரியை வெட்டி கொலை!

siren-police

தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அருகில் உள்ள பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் 1ஆம் முதல் 5ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இங்குக் காவியா என்பவர் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த தற்காலிக ஆசிரியை காவியாவை அஜித்குமார் என்பவர் வெட்டி கொலை செய்துள்ளார்.  இதனையடுத்து அஜித்குமார்  தஞ்சாவூர்  தாலுகா காவல் நிலையத்தில்  சரணடைந்துள்ளார். இது தொடர்பாகக் கொலையாளி அஜித்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், எதற்காக ஆசிரியையை அஜித்குமார் கொன்றார் என்ற விவரம்  இதுவரை தெரியவில்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 
 
தஞ்சாவூர் அருகே அரசு தொடக்கப்பள்ளி தற்காலிக ஆசிரியர், இளைஞர்  ஒருவரால் வெட்டி கொலை செய்யப்பட்ட  சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த தற்காலிக ஆசிரியை ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisment
GOVT PRIMARY SCHOOL police Police investigation teacher Thanjavur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe