அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டை தொடர்ந்து காணும் பொங்கல் தினமான இன்று (17-01-26) காலை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வருகை தந்தார்.
முதல்வர் பேசுகையில், “மதுரை மண் என்பது வீரம் நிறைந்த மண்ணாகும். அப்படிப்பட்ட வீரம் நிறைந்த மண்ணில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கும் போது நமக்கெல்லாம் வீரம் வருகிறது. அதனை அடக்குகிற காளையர்களை பார்க்கும் போது நமக்கு பெருமையாக இருக்கிறது.ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்திருக்கும் நான் ஏதாவது அறிவிப்புகளாஇ வெளியிட்டு போனதால் உங்களுக்கும் திருப்தி எனக்கும் திருப்தியாக இருக்கும். அதனால் இரண்டு அறிவிப்புகளை நான் மகிழ்ச்சியோடு அறிவிக்க விரும்புகிறேன்.
முதல் அறிவிப்பு, பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கு பெற்று அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசு பணியிடங்களுக்கு பணியமர்த்தி வழிவகை செய்யப்படும். இரண்டாவது அறிவிப்பு, உலகப் புகழ்பெற்ற தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான அலங்காநல்லூரில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையன் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் 19 காளைகளை அடக்கிய கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்புடைய கார் வழங்கப்படுள்ளது. பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் 17 காளைகளை அடக்கி இரண்டாவது இடம் பிடித்து பைக் பரிசு பெற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஏவிஎம் பாபுவின் காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/17/683-2026-01-17-19-19-06.jpg)