டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். அப்போது ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டது. 

Advertisment

மேலும் இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்தும்  உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு அதிகாரி சார்பில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ் மற்றும் சம்மன் அனுப்பியது. இதனையடுத்து அமலாக்கத்துறைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

இதனையடுத்து இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை உதவி இயக்குநர் விகாஷ் குமாரை ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தார்கள். இருப்பினும் இன்று அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவர் ஏன் ஆஜராகவில்லை என்று கேள்வி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும் வகையில் அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி வாதிடுகையில், “அமலாக்கத்துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் இந்த வழக்கில் ஆஜராகுவதில் இருந்து விதிவிலக்கு பெற்றுள்ளார்” எனத் தெரிவித்தார்.

hc

அப்போது  நீதிபதிகள், “உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ததாகக் கூறப்படுகிறது. அமலாக்கத்துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் நேரில் அவர் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டுள்ள மனு தள்ளுபடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அவர் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டனர். இதனையடுத்து இதற்குப் பதிலளித்த அமலாக்கத்துறை தரப்பில் அடுத்த விசாரணையின் போது விகாஷ் குமார் கட்டாயம் ஆஜராகுவார் என உறுதி அளித்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (15.12.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதனையடுத்து நீதிமன்ற அமைப்பு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். 

Advertisment

அதே சமயம் இந்த வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட அமலாக்கத்துறை மேல் முறையீட்டுத் தலைவர் பிரதீப் குமார் உபாத்தியா மற்றும் நிர்வாக பதிவாளர் நஸ்ரின் சித்திக் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகவில்லை. அவர்களுக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு அலுவலர், நிர்வாக பதிவாளர் ஆகியோர் வரும் ஜனவரி 19ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.