தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி அஜிதா என்பவர், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைனை அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டார்.  விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தே பல்வேறு பணியாற்றி வந்த அஜிதா, கட்சி தொடங்கிய பின் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பொறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி பனையூரில் இன்று (23.12.2025) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று, பொறுப்பு வழங்கப்படுபவர்களுக்கு பொறுப்பு நியமன ஆணைகளை வழங்குவதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Advertisment

இதனை அறிந்த அஜிதா தனது ஆதரவாளர்களுடன்பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்று விஜய்யை சந்தித்து முறையிட வந்திருந்தார். அவர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியதால் கட்சி அலுவலகம் முன்பு அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியே காலையில் இருந்தே காத்துக்கொண்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து, விஜய் தனது இல்லத்தில் இருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு கார் மூலம் வருகை தந்தார். அப்போது அலுவலகம் முன்பு காத்துக் கொண்டிருந்த அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள், முறையிடுவதற்காக விஜய்யின் காரை வழிமறித்து தடுக்க முயன்றனர். ஆனால் விஜய்யின் கார் அங்கு நிற்காமல், அவரை தடுத்து நிறுத்தியவர்கள் மீது மோதும்படி அதிவேகமாக கட்சி அலுவலகத்துக்குள் சென்றது. 

Advertisment

விஜய்யின் கார் கட்சி அலுவலகத்திற்குள்ளே சென்ற நிலையில், யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இத்தகைய பரரப்பான சூழலில் தான்  தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 'சாகும் வரை இங்கேதான் இருப்பேன். போகமாட்டேன். விஜய் என்னிடம் வந்து பேசியே ஆகவேண்டும்' என தெரிவித்த அஜிதா, பனையூர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  தர்ணாவில் ஈடுபட்டு வந்தார். இதனை தொடர்ந்து அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்களோடு கட்சியின் இணைச் செயலாளர் நிர்மல் குமார் பேச்சுவார்த்தையை நடத்தி சமாதான முயற்சியில் ஈடுபட்டார்

tvk-vijay-1

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “கட்சி மற்றும் விஜய்யின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. சீக்கிரமா எங்களை கூப்பிட்டு பரிசீலனை செய்வார்கள்  என்னைக்குமே எங்களுடைய பயணம்  தமிழக வெற்றி கழகத்தில் விஜய்க்கு  மட்டுமே எங்களோட  பயணம் தொடரும். எங்கள் உயிருள்ள கடைசி நொடி வரைக்கும் எங்களுடைய தமிழக வெற்றி கழகத்திற்காகவும் எங்கள் விஜய்க்காகவும் எங்களுடைய இறுதி மூச்சி வரை நாங்கள் பயணிப்போம்” எனத் தெரிவித்தார். அதே சமயம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக வெர்ஜின் ஆரோக்கியா பிரைட்டரும் தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளராக மதன் ராஜாவும், தூத்துக்குடி வடகிழக்கு மாவட்டச் செயலாளராக மகேஸ்வரனும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக பாலசுப்பிரமணியனும் நியமிக்கப்பட்டனர். அதோடு சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Advertisment

இது குறித்து விஜய் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டப்பட்டுள்ள பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பணிகளை மேற்கொள்ள, கழக அமைப்பானது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி, 120 மாவட்டங்களாக ஏற்கெனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காகக் கழக மாவட்டங்களின் எண்ணிக்கை கூடுதலாக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது 8 மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.