Advertisment

அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை; பணி நியமனம் வழங்கிய அமைச்சர்

புதுப்பிக்கப்பட்டது
a4270

Ajith Kumar's brother gets government job; Minister appoints him Photograph: (sivakangai)

நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று (01.07.2025) நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது. இந்த வழக்கில் 'மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் பால் சுரேஷ் நீதி விசாரணை நடத்த வேண்டும். இதற்காகத் திருப்புவனம் காவல் ஆய்வாளர், சப் இன்ஸ்பெக்டர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டவர்கள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்.

Advertisment

காலம் செல்லச் சொல்ல, நாட்கள் ஆக ஆகச் சாட்சியங்கள் அழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த சம்பவம் நடந்த இடங்கள் ஏற்கனவே பாதுகாக்கப்படாமல் உள்ளது. எனவே இது போன்ற செயல்கள் மேற்கொண்டு இந்த வழக்கைப் பலமிழக்க, வலுவிழக்கச் செய்யும்' எனத் தெரிவித்து இந்த வழக்கை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன் குமாருக்கு அரசு சார்பில் வேலை வழங்குவதற்கான நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பெரியகருப்பன் பணி நியமன ஆணையை அஜித் குமாரின் குடும்பத்தாரிடம் கொடுத்துள்ளார். பணி ஆணை மட்டுமல்லாது அஜித்குமாரின் வீட்டுக்கு இலவச மனை பட்டாவும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

sivakangai TNGovernment thirupuvanam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe