போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமார் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!

102

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த சிவகாமி என்ற மூதாட்டி மீதும், நிகிதா என்ற பெண் மீதும் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாக 9 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நிகிதாவால் ஏமாற்றப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த மோசடிகளை தெரிவித்து வருகின்றனர். அஜித் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த உத்தரவின் படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அஜித்குமாரின் சகோதரர் நவீன் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே காவலர்கள் அடித்து துன்புறுத்தியதாக அவரது தாயார் கூறியிருந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நவீன் குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 

madurai police thirupuvanam
இதையும் படியுங்கள்
Subscribe