Advertisment

டிஜிபி அலுவலகம் முன்பு ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்!

Untitled-1

சென்னையில் உள்ள தமிழ்நாடு டிஜிபி அலுவலக வாயிலில், புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடந்துள்ளது.

Advertisment

புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, இன்று பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளிக்க வந்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டிஜிபி அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது, அலுவலக நுழைவு வாயிலில் நான்கு பேர் கொண்ட கும்பல் அவரைத் சரமாரியாக தாக்கியுள்ளது.

ஏர்போர்ட் மூர்த்தி, விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வந்ததாகவும், அதனால் தான் இந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விசிகவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. பின்னர், அந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. 

டிஜிபி அலுவலகத்தின் வாயிலில், காவல்துறையின் முன்னிலையில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

dgp Thirumavalavan vck
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe