ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு; சென்னையில் பாதுகாப்பாக தரையிறக்கம்!

chennai-airport-air-india

ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் கலக்கத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கே.சி. வேணுகோபால், கொடிக்குனல் சுரேஷ் உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் உட்பட 181 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று (10.08.2025) இரவு  08:15மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டது. இந்நிலையில் இந்த விமானம் பெங்களூரை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் இயந்திரத்தில் திடீரன கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானி மூலம் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் சுமார் 2 மணி நேரமாக வானில் வட்டமடித்த பின்னர் இரவு 11:20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அதனைத்  விமானத்தில் பழுது பார்க்கும் பணி நடைபெற்றது. இருப்பினும் இந்த பணி முடியாததால் 2  மணி நேரம் தாமதமாக  மாற்று விமானத்தில் பயணிகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதே சமயம் இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து ஆணையகம் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Air india Chennai chennai airport Delhi thiruvananthapuram
இதையும் படியுங்கள்
Subscribe