Advertisment

அதிமுகவில் விருப்ப மனு; அலை மோதும் ர.ர.க்கள்!

q4

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.அதன்படி இந்த விருப்ப மனு கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடக்கிறது. 

Advertisment

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை முதல் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் ( ரத்தத்தின் ரத்தங்கள் ) கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யும் பலரும் தங்கள் பெயரில் ஒரு விருப்ப மனு தாக்கல் செய்வதுடன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் ஒரு விருப்ப மனுவை தாக்கல் செய்து வருகிறார்கள். 

Advertisment

விருப்ப மனு கொடுத்து விட்டு வரும் ர.ர.க்கள் சிலரிடம் பேசியம்போது, "திமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.  வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், அதிமுகவினர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விருப்ப மனுக்களை தாக்கல் செய்வதன் 5வது நாளான இன்று  அமாவாசை என்பதாலும், அனுமன் ஜெயந்தி என்பதாலும், வெள்ளிக்கிழமை என்பதாலும்  விருப்ப மனு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது" என்கிறார்கள். 

இன்று மேள தாளத்துடனும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போல வேடமிட்ட கலைஞர்களை அழைத்து வந்தும் மனுத் தாக்கல் செய்துவருகின்றனர். இதனால்  அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் கூட்டம் கூடியுள்ளது. அதேநேரம், அனைவரும் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் சார்பிலும் எடப்பாடிபழனிசாமி சார்பிலும் விருப்ப மனுக்களை வாங்கி தாக்கல் செய்துவருகிறார்கள். இபிஎஸ் நடத்திய சுற்றுப்பயணத்தின் மூலம், 'தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது'  என்கிற நம்பிக்கை அதிமுகவினரிடம் அதிகரித்து வருகிறது.

admk eps vote
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe