Advertisment

“கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க, போங்க அங்கிள்” - விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுக

vijayadmk

AIADMK's criticized to TVK leader Vijay

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையை இன்று (13-02-26) நடத்தினார். அதில் அவர் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக அவர் பேசியதாவது, “அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில் அடுத்தவர்களுடைய அட்ரஸில் அரசியல்வாதிகளாக இருந்துகொண்டு இவர்கள் எல்லோருக்கு ஒரு சவால் விடுகிறேன். என்னை மாதிரி தனியாக சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பித்து குறைந்தபட்சம் ஒரு சதவீதம் வாக்கு வாங்கி காட்டுகிற அந்த தில்லு இருக்கிறதா? திராணி இருக்கிறதா? 30 வருடமாக மக்கள் இயக்கமாக இருந்து இன்றைக்கு மிகப்பெரிய ஒரு அரசியல் கட்சியாக வளர்ந்து, இந்த கூட்டணி கட்சிகளை மட்டுமே நம்பி இருக்கிற 75 வருட கட்சி, 50 வருட கட்சி என்று ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டிருக்கிற எல்லோரையும் மீறி இன்றைக்கு களத்தில் தனியாக நின்று இந்த இரண்டே வருடத்தில் முதன்மை சக்தியாக வளர்ந்து 30 சதவீதத்தையும் தாண்டி மக்கள் ஆதரவை பெற்றிருக்கிறோம்.

Advertisment

உங்களுக்கு அனுபவம் என்னவென்று நான் சொல்லட்டுமா? கட்சி ஆரம்பித்த அண்ணாவை மறந்தது, கட்சி ஆரம்பித்த எம்.ஜி ஆரை மறந்தது, கட்சியை வளர்த்த ஜெயலலிதாவை மறந்தது தான். இவர்கள் எல்லோரும் சொன்ன விஷயங்கள், பேசின விஷயங்கள், எதை எதை எல்லாம் ஃபாலோ செய்ய வேண்டும் என்று சொன்ன விஷயங்கள் என எல்லாவற்றையும் மறந்தது தான். நமக்கு அனுபவம் இல்லை என்று சொல்கிறார்கள். நமக்கு அனுபவம் இல்லை தான், கொள்ளை அடிப்பதில் அனுபவம் இல்லை. அதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது. இந்த கொள்கையை பேருக்கு மட்டும் வைத்துக்கொண்டு நேரடியாக சரண்டர் ஆவது, மறைமுகமாக சரண்டர் ஆவது, இந்த மாதிரி அனுபவம் எல்லாம் நமக்கு இல்லை தான். அதுவும் நமக்கு சுட்டு போட்டாலும் வராது” என்று பேசினார்.

Advertisment

விஜய்யின் விமர்சனத்துக்கு அதிமுக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle? அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க... வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஆகியோரைப் பார்த்து COPY PASTE uu....(காபி பேஸ்ட்). அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் Legacy-யை திருடி, COPY PASTE uu... இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க? ‘தி.மு.க. எதில் எல்லாம் Out Of Control’ என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவரின் ஆணைங்கிணங்க நாமும் பதிவிட்டதைப் பார்த்து Copy (காபி) அடித்து யாரோ எழுதிக் கொடுத்ததை, ‘Action’ என்று சொன்னதும் அடி மாறாமல் ஒப்பித்துள்ளார் பனையூர் பண்ணையார் நடிகர் விஜய்.

சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா? கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கி எடுப்பது போல, மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி என்ற பெயரில் ஒரு வாட்சப் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், ‘அடுத்த கட்சிகளை கலைத்து விட்டு வாருங்கள்’ என்று சவால் விடுவது சிரிப்பாக உள்ளது. உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்?  எங்கள் பெரியாரின் பெயரில், எங்கள் அண்ணாவின் பெயரில், எங்கள் புரட்சித் தலைவரின் பெயரில் சவாரி செய்வதை நீங்கள் நிறுத்துங்களேன் பார்ப்போம். எங்கள் முழக்கம் இன்றும் ‘அண்ணா நாமம் வாழ்க’ தான். நாங்கள் என்றென்றும் எம்.ஜி.ஆரின் ‘இரத்தத்தின் இரத்தமான’ உடன்பிறப்புகள் தான். நாங்கள் இன்றும், என்றும் முன்நிறுத்துவது எங்கள் இதயதெய்வம் ‘ஜெயலலிதாவின் ஆட்சி’ யைத் தான்!

‘ஜெயலலிதாவின் ஆட்சி அமைய அணிலாய்’ இருந்ததாக சொல்லிய உங்களை, மிகப்பெரிய துயரத்தின் போது, 41 பேர் மரித்த போது பேசக்கூடாது என்ற ஜெயலலிதா கற்றுத் தந்த அரசியல் பண்போடு தான் எடப்பாடி பழனிசாமி நாகரிகத்தோடு நடந்துகொண்டார். அப்புறம் பனையூர் பண்ணையாரே, இந்த FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே? கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க Uncle” என்று பதிவிடப்பட்டுள்ளது. 

tvk vijay admk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe