AIADMK members to join TRP tomorrow! Photograph: (tvk)
அதிமுகவிலிருந்து த.வெகவிற்கு ஆட்களை அழைத்து வரும் அசைன்மென்ட்டை செங்கோட்டையானிடம் ஒப்படைத்திருந்தார் விஜய். கடந்த சில நாட்களாக இது குறித்து தீவிர கவனம் செலுத்தி வந்தார் செங்கோட்டையன். அதிமுகவினர் பலரிடமும் பேசியபடி இருந்தார். த.வெ.க.வில் இணைவதன் மூலம், என்னென்ன அரசியல் வாய்ப்புகள் கிடைக்கும்? என்ன மாதிரி பொறுப்புகள் கிடைக்கும்? நன்மைகள் என்ன? என்பது குறித்ததெல்லாம் அவர்களுக்கு கிளாஸ் எடுத்திருக்கிறார் செங்கோட்டையன்.
இந்நிலையில், சென்னையில் உள்ள செங்கோட்டையன் வீட்டில், அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாஜி எம்.பி.க்கள், ஒன்றியச் செயலாளர்கள் என நிறையப் பேர் கூடியிருந்தனர். அவர்களிடம் நீண்ட நேரம் செங்கோட்டையன் விதித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் த.வெ.க.வில் இணையச் சம்மதித்துள்ளனர்.
இந்த விவரங்களை விஜய்யிடம் தெரிவித்திருக்கிறார் செங்கோட்டையன், இந்த நிலையில் அதிமுகவினர் செங்கோட்டையன் தலைமையில் நாளை த.வெ.க.வில் இணைகின்றனர். இந்த இணைப்பு சம்பவம், அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள்.
முன்னதாக அண்மையில் நடைபெற்ற தவெக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஜனவரியில் கட்சிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக செங்கோட்டையன் பேசி இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Follow Us