Advertisment

அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்!

M

அதிமுக வாக்கு வங்கி வலுவாக உள்ள பகுதி என கூறப்படுவது ஈரோடு. கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலம் தான். ஆனால் இப்போது அதிமுக அமைப்பு நிர்வாகம் சரியத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள அதிமுகவினர் தொடர்ந்து திமுகவில் இணைந்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் அதிமுகவினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சிகள் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடந்து வருகிறது.

Advertisment

அந்த வகையில் ஈரோடு மாநகரத்தை சேர்ந்த  அக்ரகாரம், பெரியசமூர் ஆகிய இடங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் ஆயிரக்கணக்கானோர் ஈரோடு மாநகராட்சி 40வது வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் ரமேஷ்குமார் தலைமையில் திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. அதிமுகவைச் சேர்ந்த ராஜா, பிரபு ஆகியோர் தலைமையில் கட்சியில் இருந்து விலகிய தொண்டர்கள் கவுன்சிலர் ரமேஷ் குமார் முன்னிலையில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுகவில் இணைந்தனர்.அதிமுகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து திமுகவில் இணைவது அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது

Advertisment
Erode admk dmk muthusamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe