AIADMK leaders pledge on MGR's lost anniversary
முன்னாள் முதல்வரும் அதிமுகவை தோற்றுவித்தவருமான எம்ஜிஆரின் 38வது நினைவு நாள் இன்று (24-12-25) தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் மற்றும் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள், ரசிகர்கள் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைவர்கள், நிர்வாகிகள் என பலரும் சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் நினைவை போற்றும் வகையில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்
அதில் எதிரிகளும் துரோகிகளும் தீட்டும் திட்டங்கள் பலிக்காது என்றும் அதிமுகவின் வெற்றியே நமது இலக்கு என்றும், மக்கள் துணையோடு எம்.ஜி.ஆர் உருவாக்கிய உண்மை ஜனநாயகத்தை எந்நாளும் காப்போம் என்றும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும், எம்.ஜி.ஆரின் புரட்சி வழியை பின்பற்றி மக்கள் தொண்டாற்ற மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்போம் என்றும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Follow Us