திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரிலுள்ள ஆரணிபாளையத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருக்கு, அருகிலுள்ள சேவூர் கிராம எல்லையில் 2.82 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு அருகில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஜி.ஆர் என்கிற கோவிந்தராஜனுக்கு சொந்தமாக கல்குவாரி உள்ளது. இதனால் சுந்தர்ராஜனின் நிலத்தை தானே வாங்கிக்கொள்வதாக கடந்த அதிமுக ஆட்சியில் 2019ஆம் ஆண்டு 1 கோடியே 92 லட்சத்துக்கு விலைப்பேசி 50 லட்ச ரூபாய் அட்வான்ஸ் தந்துள்ளார். மீதி பணம் அடுத்த 6 மாதத்தில் தந்துவிட்டு இடத்தை பத்திரப்பதிவு செய்துக்கொள்வதாக இருவரும் எழுத்துப்பூர்வமாக அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டுள்ளனர். ஆறு மாதம் கடந்தும் இடத்தை பதிவு செய்துக்கொள்ளவில்லை. அப்போது அமைச்சராக இருந்த சேவூர்.ராமச்சந்திரன் பெயரைச் சொல்லி கோவிந்தராஜன் மிரட்டியுள்ளார்.

Advertisment

அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்தபின் இப்போது மிரட்ட மாட்டார்கள் என நினைத்து பணத்தை தந்துட்டு இடத்தை பதிவு செய்துக்குங்க எனச்சொல்ல அப்போதும் நான் பணம் தரும்போதுதான் தருவேன் என்றுள்ளார். இதனால் சுந்தர்ராஜ், திமுக பிரமுகரும், அரசு வழக்கறிஞருமான கே.வி.மனோகரனிடம் சென்று சட்ட ஆலோசனை கேட்டுள்ளார். அவர் நான் பணம் வாங்கித்தருகிறேன் எனச்சொல்லி 2021 நவம்பர் மாதம் முதல் கொஞ்ச கொஞ்சமாக பணம் வாங்கி தந்துள்ளார். தற்போது மீதி 50 லட்சம் பேலன்ஸ் தரவேண்டிய நிலையில் அந்த பணத்தை தரமாட்டேன் இடத்தை பதிவு செய்து தா என கோவிந்தராஜனும் அவரது மகன்களும் சுந்தர்ராஜை மிரட்டியுள்ளனர்.

Advertisment

ad2

இந்நிலையில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி சுந்தர்ராஜனின் சகோதரிகள், நிலத்தில் பயிர் செய்ய சென்றுள்ளனர். அப்போது கோவிந்தராஜன் மற்றும் அவரது மகன் மோகன் இருவரும் வந்து தகராறு செய்துள்ளனர். இந்த நிலத்தை எங்க அண்ணன் எங்க பேர்ல எழுதி தந்துட்டாரு எனச்சொல்ல, நான் இந்த நிலத்துக்கு ரேட் பேசி வச்சியிருக்கேன் எனச்சொல்ல இருதரப்பினருக்கும் தகராறு அதிகமாகியுள்ளது. அப்போது தகராறை வீடியே எடுத்த சுந்தர்ராஜின் உறவினரின் செல்போனை மோகன் பிடுங்கி வீசியுள்ளார். சுந்தர்ராஜின் அம்மாவையும் அடித்து தள்ளியுள்ளனர். அவர் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட பின்பும் அதிமுக பிரமுகர்களின் அழுத்தத்தில் வழக்கு பதிவு செய்யவில்லையாம் காவல்துறை. அதன்பின் நீதிமன்றத்தில் முறையிட முயன்ற பின்பே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதுக்குறித்து வேறு சிலரிடம் நாம் விசாரித்தபோது, ‘ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள 6 மாதம் கடந்தும் இடத்தை கோவிந்தராஜ் இடத்தை வாங்கவில்லை. அதன்பின் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் இடத்துக்கு உரிய பணத்தை தரவில்லை. தற்போது மீதி 50 லட்சத்தை தருகிறேன் இடத்தை பதிவு செய்யவேண்டும் எனக் கேட்டுள்ளார். அப்போது தான் அந்த விலை, இப்போது விலை ஏறியுள்ளது. இந்த இடத்தின் மதிப்பு இப்போது 20 கோடி ரூபாய். முன்பு இரண்டு கோடிக்கு அக்ரிமெண்ட் போட்டது, இப்போது 1 கோடி சேர்த்து 3 கோடியாக தாங்கள் எனக் கேட்கிறார். கோவிந்தராஜனோ அதெல்லாம் முடியாது 10 லட்சம் சேர்த்து தர்றன் என்கிறார். இந்த பிரச்சனை நடக்கும்போது கோவிந்தராஜ் அடியாட்களை வைத்தும் மிரட்டினார். இதனால் இடத்தை தன் சகோதரிகள் பெயரில் எழுதி வைத்துவிட்டார். என்னை மீறி இந்த நிலத்துக்குள்ள, எவன் வருவான்னு பார்த்துடறன்னு கிரஷர் கற்களை கொண்டுவந்து 2 ஏக்கரிலும் கொட்டிவிட்டார்கள் கோவிந்தராஜனும், அவரது மகனும். போலீஸை வைத்தும் மிரட்டுகிறார். பாதிக்கப்பட்ட சுந்தர்ராஜ், உயிர் பயத்தோடு வாழும் அவரது குடும்பமும் அதிமுக தான் என்கிறார்கள்’ விவரம் அறிந்தவர்கள்.

Advertisment