முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம் அடுத்த கட்ட தனது அரசியல் நகர்வாக இன்று (21.01.2026) காலை திமுகவில் இணைந்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/21/719-2026-01-21-10-16-24.jpg)
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்து வரும் வைத்திலிங்கம் அதிமுகவின் முக்கிய பிரபல பிரமுகராகவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக வலம் வந்தவர். கடந்த 2022 இல் அதிமுக ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை எழுந்த போது ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருந்தார். அதன்பின்னர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இணை ஓருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/21/721-2026-01-21-10-16-41.jpg)
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவிடம் வைத்திலிங்கம் கொடுத்த நிலையில் திமுகவில் இணைய திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை செந்தில்பாலாஜி உள்ளே அழைத்துச் சென்ற நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வைத்தியலிங்கம் திமுகவில் இணைந்தார். வைத்திலிங்கத்தின் மகன் பிரபுவும் திமுகவில் இணைந்தார். அதேபோல் ஓபிஎஸ் ஆதரவாளரும், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான ராமச்சந்திரன் திமுகவில் இணைய உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/21/722-2026-01-21-10-16-05.jpg)