அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 10 சென்னை வானகரம் அருகேயுள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவைத்தலைவர் தமிழ்மகன் ஹுசைன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான உத்திகள், கட்சியின் உள் ஒற்றுமையை வலுப்படுத்துதல், திமுக அரசுக்கு எதிரான தீர்மானக்கள் என முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தோல்வியைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் தலைமையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தக் கூட்டம் அமையும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/23/4-2025-11-23-14-22-36.jpg)