தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.

Advertisment

தற்போது அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் மனுக்களைப் பெறும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அன்புமணியின் பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை அறிவித்துள்ளது. என்டிஏ கூட்டணியில் அதிமுக உள்ள நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை இன்று முதல் பெறலாம் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது.

Advertisment

அதன்படி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டது. பலரும் விருப்ப மனுக்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.  இன்று முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை விருப்புமனுக்களை அதிமுக வழங்கவுள்ளது. தமிழகத்தில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்களை பெற 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு 5000 ரூபாயும், கேரளாவிற்கு 2000 ரூபாயும் விருப்பமனு கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.