தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. குறிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி மக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.

Advertisment

இந்த சூழ்நிலையில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாததால் திமுக அரசை கண்டித்தும், உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னையில் நாளை (17-12-25) போராட்டம் நடத்தப்போவதாக பா.ம.க தலைவர் அன்புமணி சில தினங்களுக்கு முன்பு அறிவிதார். இந்த போராட்டத்தில் திமுகவை தவிர அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை வைத்தார். அதன்படி அதிமுக, தவெக, அமமுக, நாதக உள்ளிட்ட கட்சிகளுக்கு அன்புமணி தரப்பு பா.ம.கவினர் அழைப்பு விடுத்தனார்.

Advertisment

இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு கோரி அன்புமணி நாளை நடத்தும் போராட்டத்தில் அதிமுக பங்கேற்காது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை பா.ம.க வழக்கறிஞர் பாலு தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து வேண்டும் என்று நேரில் அழைப்பு விடுத்தனர். ஆனால், அதிமுக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்காது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது வன்னியர் சமூக மக்களுக்கு 10.5% உள்ஒதுக்கீட்டை வழங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட 10.5% உள் இடஒதுக்கீடு சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. இத்தகைய சூழலில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த அன்புமணி அனைத்து கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment