Advertisment

“தவெகவிற்கு பிறகு நமமுக தான்” - பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா!

Mishra

நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில மாநாடு தேனியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் பிஎல்ஏ. ஜெகநாத் மிஸ்ரா பேசியதாவது...

Advertisment

இந்த மாநாடு இரண்டு மணிக்கு தொடங்க வேண்டியது. ஆனால், நீங்கள் அத்தனை பேரும் ஒரு சிறப்பான வரவேற்பை கொடுத்து மாநாட்டு அரங்கிற்கு நுழைய ஆறரை மணி ஆகிவிட்டது. என்னை பொறுத்தவரை எப்போதும் மக்களையும், தொண்டர்களையும் கஷ்டப்படுத்த கூடாது என்று நினைக்க கூடியவன். இந்த தேனி மண்ணுக்கே மிகப்பெரிய பெருமைகள் இருக்கு. தமிழ்நாட்டிலே இந்தியாவிலே ஆறு முதலமைச்சர்களை கொடுத்த ஒரு மாவட்டம் இருக்கிறது என்றால் அது நம் தேனி மாவட்டம் என்பது சாதாரண விஷயம் அல்ல, பி.டி.ராஜன், எம்ஜிஆர், ஜெயலலிதா, நாவலர் நெடுஞ்செழியன் ,  ஜானகி ராமச்சந்திரன், ஓபிஎஸ் என ஆறு முதலமைச்சர்களைக் கொடுத்த மாவட்டம். நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் செல்வாக்கு மிகுந்த மாவட்டமும் தேனி மாவட்டம் தான்.

Advertisment

இன்னைக்கு பாத்தீங்கன்னா நடிகர் விஜய் கூட்டக்கூடிய கூட்டத்திற்கு டோக்கன் வழங்குகிறோம் என்று கூறுகிறார்கள். அடுத்ததாக ஒரு கட்சிக்கு டோக்கன் வழங்கிறோம் என்று கூறிய ஒரே கட்சி நமது மக்கள் முன்னேற்ற கழகம் தான். நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒரு மாபெரும் வெற்றி ஜெகநாத் மிஸ்ரா அவருக்காக அரசியல் செய்கிறாரா? எனக்காக ஒருபோதும் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. என்னை நம்பி 30 ஆண்டு காலமாக ஒரு அரசியல் அதிகார பதவியிலே வருவார், நம்மளையும் ஒரு அரசியல் அதிகார பதவியிலே அமரவைத்து அழகு பார்ப்பார் என்று எண்ணம் கொண்ட லட்சோப லட்சம் தொண்டர்களுக்காக தொடங்கப்பட்டது தான் நமது மக்கள் முன்னேற்ற கழகம்.

மாநாடு வந்து எதிரே இருக்கிற திடலில் நடக்க வேண்டியது. காவல்துறை தரப்பிலிருந்து உங்கள் மாநாட்டிற்கு 20,000 பேருக்குகு மேல வருவதாக எங்கள் உளவுத்துறை ரிப்போர்ட்டே சொல்லுது. அந்த இடம் தாங்காது என்று முந்தா நாள் சொல்றாங்க. நீங்க இடத்தை கொஞ்சம் மாத்திக்கங்க. அவுட்டர்ல அங்க போடுங்க. இங்க போடுங்க அப்படின்னாங்க. நான் சொன்னேன் இந்த இடத்தை அறிமுகப்படுத்திட்டோம். மக்களை வந்து நான் சிரமப்படுத்த விரும்பல. கூட்டத்தை குறைத்துக் கொள்கின்றோம். இன்னைக்கு பெருவாரியாக பல்வேறு தேனி மாவட்ட கிராமங்களிலிருந்து வருகை புரியக்கூடிய மக்களை இருங்க. நீங்க வீட்டிலிருந்தே லைவ்ல பாருங்க. 

எல்லா டிவிலுமே ஒளிபரப்ப போகுது நீங்க லைவ்ல பாருங்க. மாநாடு நடத்துவது நமக்கு சாதாரண விஷயம். மற்றவர்களுக்கு கடினமான விஷயமா இருக்கும். இன்னைக்கு தமிழகத்தில மூன்றே மாதத்தில ஒரு அரசியல் கட்சி ஏழு மாநாடுகளை நடத்தி இருக்கிறது என்றால் அது நமது மக்கள் முன்னேற்ற களம்தான். ஜெகநாத் மிஸ்ராவுக்கு இரண்டு நாள் போதும் இதே தேனியில் இரண்டு லட்சம் பேரை திரட்டி மாநாடு நடத்துவதற்கு இரண்டு நாள் போதும். இது ஒன்னும் புதிய கட்சி இல்ல. இங்க மேடையில் உட்கார்ந்திருக்கக்கூடிய ஒவ்வொரு தலைவர்களுமே 30 ஆண்டு காலம் 40 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் சாதாரண தலைவர்கள் இல்ல நமது மக்கள் முன்னேற்ற களத்தில இருக்கக்கூடிய ஒவ்வொரு பொறுப்பாளர்களும் சாதாரணவர்கள் அல்ல. திறன் வாய்ந்தவர்கள்.

இன்று நம் மாநாட்டில் ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறோம். அந்த ஆம்புலன்ஸ் மதமோ, சாதியோ பார்க்காது. அந்த ஆம்புலன்ஸ் உயிரை காக்க போகுது மனித நேசத்தை மட்டும் தான் பார்க்க போகுது. அதே மாதிரிதான் நமது மக்கள் முன்னேற்ற கழகம் ஜாதி பார்ப்பது இல்லை, மதம் பார்ப்பது இல்லை, மக்களுடைய மனித நேயத்தைதான் பார்க்கப் போகிறது என்றார்.

new party politics Theni
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe