Adventure on a two-wheeler - Volunteers who are so enthusiastic that they don't realize the danger Photograph: (tvk)
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் முன்னிலையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இன்று மூன்றாவது கட்டமாக கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அக்கட்சியின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல்லில் எல்லைப் பகுதியான எம்.களத்தூர் பகுதிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து பிரச்சார பேருந்திற்கு மாறினார். அங்கிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். விஜய் வருகையை ஒட்டி நாமக்கல் மாவட்டத்தில் அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். தற்போது பிரச்சார வாகனத்தில் பயணித்து வரும் விஜய்யை அவரது தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர்.
தொடர்ந்து விஜய்யின் பரப்புரை வாகனம் நெடுஞ்சாலைக்கு வந்த நிலையில் தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றனர். அதில் சில தொண்டர்கள் விஜய்யை பார்க்கும் ஆர்வமிகுதியால் இருசக்கர வாகனத்தில் நின்ற படி ஆபத்தை உணராமல் சென்றனர்.