Advertisment

“சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது” - தீர்மானம்!

admk-meeting-general-body-resolution

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சியின் சட்ட திட்ட விதிகள் 19 உட்பிரிவு 7 மற்றும் 25 உட்பிரிவு 2இன்படி, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (10.12.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தின் தொடக்கத்தின் போது, விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதைச் செலுதினார். 

Advertisment

அதே சமயம் அக்கட்சியின் அவைத் தலைவரும், இன்றைய கூட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டிய தமிழ்மகேன் உசேனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக செயற்குழுவின் தற்காலிக அவைத் தலைவராக, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி நியமிக்கப்பட்டு செயற்குழு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், “பொது எதிரியை வீழ்த்த, ஒத்த கருத்துடைய கட்சிகள் கால சூழ்நிலைக்கேற்ப ஒன்றிணைந்து, திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு, தமிழ் நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அதிமுக -, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு, 2.5.2025 அன்று நடைபெற்ற  கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அங்கீகாரம் அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இப்பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிக்கிறது.

Advertisment

வருகின்ற தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு, 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' தலைமை தாங்குகிறது. கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடிபழனிசாமிக்கு, இப்பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையிலும், தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையிலும், முன்ன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பின்படி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது. கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்ட ஒப்புதசை முறையாக, சரியாக, போதிய புள்ளி விவரங்களோ அனுப்பாத விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையின்னை போக்கிற்கு கண்டனம். சேலம், கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் 'பஸ் போ அமைக்க வலியுறுத்தல்.

admk-meeting-general-boady

ஜனநாயகத்திற்கு தேர்தல் ஒரு பொன் மகுடமாகும். மக்களாட்சித் தத்துவத்திற்கு ஆதாரமாக விளங்குவது மக்களின் வாக்குரிமையே ஆகும். அத்தகைய வாக்குரிமையை நிலைநிறுத்தும் வாக்குப் பதிவு முறையாகவும், சரியாகவும் திகழ வேண்டும் என்பதாலேயே, சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (S.I.R.) அதிமுக வரவேற்கிறது. முறைகேடான வாக்காளர் பட்டியல் மற்றும் தில்லு முல்லுகளை நீக்கி, தகுதியான வாக்காளர்களைக் கொண்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். அந்நிய முதலீட்டில் ஆமை வேகம். குறையும் முதலீடுகள். இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள்! தமிழக இளைஞர்களுக்கு எட்டாக்கனியான வேலை வாய்ப்புகள். தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி, பொய் புரட்டு போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் முதலமைச்சருக்கு கண்டனம். 

படுபாதாளத்திற்குச் செல்லும் தமிழ் நாட்டின் நிதி நிலைமை. கடன் தொகையில் மூலதனச் செலவு செய்யாமல், வருவாய் செலவினத்திற்கு செலவழித்துவிட்டு, தமிழக மக்களைத் தொடர்ந்து கடனாளிகளாக்கும்  திமுக அரசுக்கு கண்டனம். நீதித் துறை சுயமாக செயல்பட வேண்டுமென்றால் அதன் தனித் தன்மை காப்பாற்றப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட வேண்டுமென்றால், ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கக்கூடாது. மேலும், ஆட்சியாளர்கள் மிரட்டல் போக்கை கைவிட வேண்டும்; நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும். அதோடு, நீதித் துறையில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்ற மக்களின் எண்ணத்தை; எதிர்பார்ப்பை பொதுக்குழு பிரதிபலிக்கிறது. நீதித் துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

admk edappadi k palaniswami general body meeting
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe