அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்தவரும், முன்னாள் எம்.பி.யுமான மைத்ரேயன், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு..க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (13.08.2025)  திமுகவில் இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தமிழ்நாடு இன்றைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலே மிகப்பெரிய முன்னேறிய மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. கல்வி, சமுதாய முன்னேற்றம், தனிநபர் வருமானம், பொருளாதார வளர்ச்சி என்று அனைத்து துறைகளிலுமே முன்னணி மாநிலமாக இருக்கிறது என்பது ஒன்றிய அரசினுடைய பொருளாதார ஆய்வறிக்கையிலும் சரி அந்தந்த துறைகளுடைய அறிக்கைகளிலுமே மிகத் தெளிவாக இருக்கின்றன. தமிழகம் இன்றைக்குப் பல விஷயங்களிலே நம்பர் ஒன் மாநிலமாக இருக்கிறது.

Advertisment

தமிழ்நாட்டினுடைய நலன் சார்ந்த விஷயங்களை நிலைநாட்டுவதிலும் கலைஞரின் மாநில சுயாட்சி முழக்கத்தினை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து அனைத்து மாநிலங்களின் நலனையும் காக்கக்கூடிய வகையிலே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றைக்குக் களத்திலே இருக்கிறார். களத்திலே தமிழர்கள் சார்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருப்பதால் தான் தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பின்னால் நிற்கிறார்கள். எனவே இந்த சூழ்நிலையிலே என்னையும் நான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சிப்பாய்களில் ஒருவராக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பி அவருடைய அனுமதி பெற்று இன்றைக்கு நான் திமுகவில் இணைந்திருக்கிறேன்.

2026 சட்டமன்ற தேர்தல் என்பது தேர்தல் வெற்றி என்பது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. நிச்சயமான ஒன்று. நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோட்டையிலே இந்த நாட்டினுடைய சுதந்திர கொடியை ஏற்றி வைக்க இருக்கிறார். அடுத்த ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி மீண்டும் இந்த நாட்டினுடைய தான் கோட்டையிலே கொடியேற்றுவார். எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. நடைபெற இருக்கின்ற தேர்தல் 2வது இடத்திற்கு யார் வருவார்கள் என்பதற்கான தேர்தல் தான் என நான் கருதுகிறேன். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் நான் இன்றைக்கு இணைந்ததிலே மிகப் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். திமுகவிற்காக என்னால் ஆன அனைத்து பணிகளையும் முயற்சிகளையும் மேற்கொள்வேன். 

அதிமுகவினுடைய போக்கு சரியாக இல்லை. அதாவது அதிமுகவினுடைய பொதுச்செயலாளர் இ விபிஎஸ் ஒரு கூட்டணி பாரதிய ஜனதா கட்சியோடு அமைத்திருக்கிறார். ஆனால் அந்த கூட்டணி அறிவித்ததே மத்திய அமைச்சர் அமித்ஷா தான். அது மட்டுமில்லை. அமித்ஷா ஒரு குறைந்தப்பட்ட்ச கூட்டணி ஆட்சி என்று சொல்லியிருக்கிறார் . குறைந்தபட்ச செயல் திட்டம் என்றும் சொல்லியிருக்கிறார். எதிலே குறைந்தபட்ச செயல் திட்டம் வரும் அதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மொழி கொள்கையிலே குறைந்தபட்ச செயல் திட்டம் என்னவாக இருக்கும்?. 

Advertisment

இருமொழி கொள்கையிலே என்னவாக இருக்கும்?, கல்வித் திட்டத்திலே தேசிய கல்வியா? மாநில கல்வியா?, தமிழ்நாட்டிற்கு நிதி உதவிகள் மறுக்கப்படுவது, சமக்கிர சிக்ஷா நிதி கொடுக்கப்படுவதிலே மத்திய அரசு பாரபட்சம் காட்டுவது, தொகுதி மறுசீரமைப்பிலே தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய ஓரவஞ்சனை இப்படி பல்வேறு வகையில் எதிலுமே எந்த அடிப்படையிலே அவர்களிடையே ஒருமித்த கருத்து வரப்போகிறது” எனத் தெரிவித்தார்.