Advertisment

“அம்பலமான தந்தை - மகன் கமிஷன் கூட்டணி” - அ.தி.மு.க. கடும் விமர்சனம்!

admk-hq-1

அமலாக்கத்துறை சார்பில் தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில், தமிழக நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம், டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி கூறி அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த கடிதத்தின் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

Advertisment

இத்தகைய சூழலில் தான் இது தொடர்பாக அதிமுக எம்.பி., இன்பதுரை மற்றும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதிநாராயணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்தனர். அதில், “அமலாக்கத்துறை சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து இந்த வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அதே சமயம் வழக்கு தொடர்ந்த ஆதிநாராயணன் மீது பல்வேறு வழக்குகள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டு தமிழக அரசு தரப்பில் அவரது மனு மீதான நீதி விசாரணைக்குப் பதிலாக அவர் மீது குற்றம் சாட்டி பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

Advertisment

மேலும் இந்த கடிதம் குறித்த ஆரம்பக் கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். மற்றொருபுறம் டி.ஜி.பி.க்கு அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தை, 2 மாதத்திற்கு பிறகுதான் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நேற்று (20.02.2026) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், “இந்த வழக்கில் அமைச்சர் கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். 

kn-nehru-2

அமலாக்கத்துறை அளித்த கடிதத்தின் அடிப்படையில் டி.ஜி.பி. அனுப்பிய புகார் கடிதம் குறித்து விசாரணை நடத்துவதற்குக் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும். ஆதிநாராயணன் தொடர்ந்த வழக்கு   தள்ளுபடி செய்யப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை உடனடியாக பதிவு செய்து துறை ரீதியாக நடைபெற்ற முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர். 

இந்நிலையில்  இது தொடர்பாக, “அம்பலமான தந்தை - மகன் கமிஷன் கூட்டணி” என்ற தலைப்பில் அ.தி.மு.க. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமைச்சர் நேரு மீதான அமலாக்கத்துறை அனுப்பிய ஊழல் விவரங்கள் குறித்து வழக்கு பதியக் கோரி அதிமுக தொடர்ந்த வழக்கில், வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், 03.12.2025 அன்று அமலாக்கத்துறை தமிழக "பொறுப்பு டி.ஜி.பி.க்கு அனுப்பிய ஆவணத் தொகுப்பில் (Dossier), பக்கம் 51-ல், "டெண்டர்களுக்கான 7.5% முதல் 10% வரையிலான கமிஷன், "Party Fund" (கட்சி நிதி) என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது" பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. 

cm-mks-7

தனது அமைச்சரைக் காப்பாற்ற தான் வழக்கு பதியாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இருந்தது என்று நினைத்தால், தன்னையும், தன் மகனையும் காப்பாற்ற தான் இத்தனை நாட்கள் வழக்கு பதியாமல் இருந்திருக்கிறார்கள். "தியாகி" பாலாஜிக்காக வந்த "தொட்டுப் பார், சீண்டிப் பார்" வீடியோ, நேருவுக்கு வராமல் போனதற்கு காரணம் இது தானா?. செந்தில் பாலாஜி வழக்கில் சுத்தி சுத்தி தான் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே?. 

நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையில் ரூ. 1020 கோடி மதிப்பில் ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள், இதில் எவ்வளவு பங்கு இந்த தந்தை, மகன் கூட்டணிக்கு என கணக்கிட்டால், தமிழ்நாட்டுக்கு ஓராண்டு பட்ஜெட்டே போட்டுவிடலாம். இன்னும் இரண்டே மாதங்கள் தான்.... அதிமுக ஆட்சி அமைந்ததும், எல்லா கோப்புகளும் (Files) திறக்கப்படும். முகத்திரைகள் கிழிக்கப்படும். இது உறுதி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

high court Enforcement Department Udhayanidhi Stalin K.N. Neru mk stalin dmk admk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe