Advertisment

“இது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம்” - அதிமுக கண்டனம்!

admk-hq-1

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்  கடந்த 27.09.2025 அன்று  கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தான் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருந்தார். 

Advertisment

இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கரூர் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம் என்று திமுக அரசு அறிவித்த பிறகு, மின்வாரிய அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஆகியோர் பிரஸ் மீட் நடத்துகின்றனர். டிஜிபி பிரஸ் மீட் நடத்துகிறார். முதல்வர் வீடியோ வெளியிடுகிறார். வருவாய்ச் செயலாளர், மருத்துவத்துறைச் செயலாளர், டிஜிபி, ஏடிஜிபி ஆகியோர் கூட்டாக பிரஸ் மீட் நடத்துகின்றனர்,இப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு.

Advertisment

இவ்ளோ பதட்டப்பட்டு என்ன சொல்ல வருகிறீர்கள்?. எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல், விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்களா?. ‘அரசியல் செய்யாதீர்... அரசியல் செய்யாதீர்’ என்று எல்லா அரசியலையும் செய்துக் கொண்டிருப்பது யார்? திமுக தானே?. உங்கள் பதட்டம் தான் உண்மையிலேயே கரூரில் நடந்தது என்ன? என்ற கேள்வியை, சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது. ஒரு விசாரணை ஆணையம் அமைத்த பிறகு, அது தொடர்பான வாதங்களையோ, காணொளிகளையோ அரசு அதிகாரிகள், அரசைச் சார்ந்தோர் பொதுவெளியில் வெளியிட்டு, ஆணையத்தின் நிர்ணயங்களை அவமதித்துள்ளீர்கள். இது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம்.

அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் எந்த புகார் வந்தாலும் அதற்கு நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம். எங்கோ ஒரு இடத்தில் நடந்த, சட்டவிரோத விற்பனை முதல் சந்து விற்பனை வரை அனைத்து புகார்களுக்கும், புகார் எழுந்த உடன், 8000க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிந்துள்ளோம். ஆனால், திமுக ஆட்சியில் நடப்பது என்ன?. தமிழகத்தில் உள்ள எல்லா டாஸ்மாக் கடைகளிலும், பாட்டிலுக்கு மேல் ரூ.10 முதல் ரூ.40 வரை கணக்கே இல்லாமல் கொள்ளை அடித்து, இப்போது பாட்டில் மேல் 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டி வசூல் செய்யும் அளவிற்கு பகல் கொள்ளை அடித்துவிட்டு, அதை ஓபனாக ஆகப் பேசுகிறேன்" என்று சொல்லி நியாயம் (Justify) செய்ய பாலாஜிக்கு வெட்கமாக இல்லையா?

இதுவரை 168 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில், ‘பத்து ரூபாய்’  என்று எடப்பாடி பழனிசாமி சொன்னாலே, "பாலாஜி" என்று மக்களே சொல்லும் அளவிற்கு, உங்கள் பத்து ரூபாய் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றினார் எடப்பாடிபழனிசாமி. அப்போது எல்லாம் கள்ள மவுனம் சாதித்த பாலாஜி, இப்போது 41 உயிர்கள் பலியானதும் இதைப் பேசுகிறீர்கள் என்றால், உங்கள் அரசின் அலட்சியத்தை, மொத்த அலட்சியத்தையும் (Gross Negligence) மறைக்க முனையும் மடைமாற்ற அரசியல் தானே இது?. ஏற்கனவே "காசு வாங்கினேன்... ஆனா திரும்ப கொடுத்தேன்" ன்னு சொல்லி தான் அமலாக்கத்துறை வந்து, உங்களுக்கு நெஞ்சு வலி எல்லாம் வந்து அழுதீங்களே.... இப்போ திரும்ப அதே டோனில் (Tone) பேசுறீங்களே... இந்த டைம் சி.பி.ஐ. (CBI) வந்தால் இதனையே தொடர்ந்து பாலோ (Conditions-ah follow) பண்ணுவீங்களா?” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

tvk vijay Tamilaga Vettri Kazhagam dmk V. Senthil Balaji karur stampede stampede karur admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe