Advertisment

கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு; செங்கோட்டையன் புறக்கணிப்பு!

eps-ed-gopi

அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எழுச்சி பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று மாலை நடைபெறும் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 6 மணி அளவில் சேலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி காரில் கிளம்பினார். ஈரோடு மாவட்டம் பவானி வழியாக இன்று காலை 7 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் அருகே வந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கும் வகையில் கவுந்தப்பாடியில் இருந்து கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் வரை சாலையின் இரு புறம் அ.தி.மு.க கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

Advertisment

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க பொறுப்பாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ தலைமையில், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் கே.சி. கருப்பணன் எம். எல். ஏ, ஜெயக்குமார் எம் எல் ஏ, கோபி நகரச் செயலாளர் பிரிணியோ கணேஷ் முன்னிலையில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தை பார்த்து உற்சாகமடைந்த எடப்பாடி பழனிசாமி காரை விட்டு கீழே இறங்கி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு சால்வை அறிவிக்கப்பட்டது. காரில் இருந்தவாறு தொண்டர்களின் நோக்கி கையை அசைத்தார். அப்போது கூடி இருந்தவர்கள் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என கோஷம் எழுப்பினர். 

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொகுதியில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்ததால் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக காணப்பட்டார். சுமார் 30 நிமிடமாக கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் வரவேற்பை ஏற்று அதன் பிறகு அங்கிருந்து காரில் சத்தியமங்கலம் கிளம்பி சென்றார். அங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க ஒருங்கிணைப்பை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டார். இது அடுத்து உடனடியாக செங்கோட்டையன் வசித்து வந்த கட்சி பொறுப்புகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அப்போது அ.தி.மு.க ஒருங்கிணைக்காமல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் வகையில் நேற்று நள்ளிரவே செங்கோட்டையன் சென்னை சென்று சென்றுவிட்டார். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி முதல் முதலாக கோவை மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசார பயணத்தை தொடங்கும் போது கோபிசெட்டிபாளையம் வழியாக சென்றார். அப்போதும் செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
K. A. Sengottaiyan admk Erode Edappadi K Palaniswamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe