கோபி செட்டிப்பாளையம் தொகுதி நல்லகவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ள முத்துமஹால் திருமண மண்டபத் திடலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தமிழக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சிறப்புப் பொதுக்கூட்டம் இன்று (30-11-25) மாலை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் இபிஎஸ் என்ன பேசப்போகிறார் என்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

Advertisment

‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பயணத்தை இதுவரை 174 சட்டமன்றத் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி நடத்தியிருக்கிறார். 64 நாட்களில் சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து 34 மாவட்டங்களில் மக்களை சந்தித்திருக்கிறார். கரூர் துயரத்திற்குப் பிறகு அடுத்தகட்ட எழுச்சிப்பயணம் மேற்கொள்வதற்கு இன்னமும் அனுமதி கிடைக்காத நிலையில், கோபிச்செட்டிப்பாளையத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மக்களை சந்திக்கிறார். 50 ஆயிரம் பேர் கலந்துகொள்ள இருக்கும் இந்த கூட்டத்தில் இபிஎஸ் என்ன பேசப்போகிறார் என்பதுதான் இப்போது ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது.

Advertisment

அதாவது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், இப்போது விஜய் கட்சிக்குத் தாவி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், இந்த தொகுதியில் எம்.எல்.ஏ. இல்லாததாக மாறியுள்ளது. இந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் 10 முறை தேர்தலில் போட்டியிட்டு, 9 முறை வெற்றி பெற்றவர் செங்கோட்டையன். அதிலும் 8 முறை கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் மட்டுமே போட்டியிட்டு வென்றிருக்கிறார். அப்படியிருக்கும் சூழலில் அதிமுகவை அழிப்பேன் என்றும் ஊழல் ஆட்சி என்றும் பேசியிருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

திமுகவின் பி டீம் என்று செங்கோட்டையனை இபிஎஸ் கூறியிருந்தார். அது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் சேகர்பாபுவிடம் ஆலோசனை நடத்திவிட்டு புதிய கட்சிக்குத் தாவியிருக்கிறார். செங்கோட்டையன் அதிமுக இணைப்புக்காகக் குரல் கொடுக்கவில்லை, தனது சுயநலத்துக்காகவே போர்க்கொடி தூக்கினார் என்பதை அறிந்தே இபிஎஸ் அவரை கட்சியிலிருந்து நீக்கியிருந்தார். இப்போது செங்கோட்டையனின் உண்மை குணம் அதிமுகவினருக்கு தெரிந்துள்ளதால் இதுபற்றி இபிஎஸ் பேசுவாரா என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ஈரோடு மாவட்ட ர.ர.க்களான அதிமுகவினர். 

Advertisment