சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் மாவட்டச் செயலாளர்கள் இன்று (05.11.2025) கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர்களிடம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். அச்சமயத்தில் அவர், “பொதுவெளியில் அதிமுகவினர் கூட்டணி தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். கூட்டணி தானாக ஏற்படும். அதுகுறித்து கவலை வேண்டாம்.” என மாவட்டச் செயலாளர்களிடம் அவர் கூறியதாக தகவல் வெளியாகியது. 

Advertisment

அதோடு அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்தும், சட்டமன்ற தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், “த.வெ.க. தலைவர் விஜய் த.வெ.க.விற்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி என மீண்டும் கூறியுள்ளார்” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “ ஒரு கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்றால் அந்த கட்சிக்கு எப்போதுமே அந்த தலைவர்கள் ஒரு தனித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று யாராக இருந்தாலும் விரும்புவார்கள். 

Advertisment

நீங்கள் (ஊடகத்தினர்) கட்சி ஆரம்பித்தால் கூட அப்படித்தான். கட்சியினுடைய ஒரு தனித்தன்மை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அறிவிப்பு கொடுத்துள்ளனர். எங்கள் தலைமை தான் கூட்டணி என்று வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் சொல்கிறோம் எங்கள் தலைமையில் தான் கூட்டணி. சரி தானே?. அவர்களது கருத்து அவர்களுடையது. எங்கள் கருத்து எங்களுடையது. 

முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் இன்று (05.11.2025) நடைபெற்றது. காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி அமைக்கப்படும். இந்த கூட்டணிக்கான முடிவு, அதற்கான அனைத்து அதிகாரமும் அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவெடுப்பார் என இந்த குழுவில்  ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisment