தேர்தல் ஆணையம் "சிறப்புத் தீவிர திருத்தம்" என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் கொண்டு வரபோவதாகக சமீபத்தில் அறிவித்திருந்தது. அதற்கான படிவங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு, அப்படிவங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட தகவல்களும் இணையத்தில் பதிவேற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது இந்த தீவிர திருத்த நடவடிக்கையில் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 97 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Advertisment

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை வரவேற்கிறோம். இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என  மிக நீண்ட காலமாகப் பல முறை மனு அளித்திருந்தோம். இப்போது தான் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். மேலும் நம்பகமான ஒரு வாக்காளர்கள் கூட விடுபட்டு விடக்கூடாது. தொடர்பு கொள்ள முடியாத நிலையிலுள்ள இடம் பெயர்ந்தவர்களுக்கும்  மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

Advertisment

குறிப்பாகச் சென்னையில் 14 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி மையங்கள்  சீரமைக்கப்பட்ட பிறகு ஏற்கனவே இருந்த மையங்களை விட தற்போது எண்ணிக்கை (கூடுதலாக 361) அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையின் மூலம் வாக்காளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வெவ்வேறு வாக்காளர் மையங்களில் பெயர் சேர்க்கப்படும் நிலை முற்றிலுமாக நீக்கப்பட்டு, அவர்கள் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

eci

அதாவது கணவன் ஒரு வாக்குச் சாவடி மையத்திலும் மனைவி ஒரு வாக்குச்சாவடி மையத்திலும், அப்பா ஒரு வாக்குச்சாவடி மையத்திலும், மகன் ஒரு வாக்குச்சாவடி மையத்திலும் வாக்களிக்கும் விதமாக ஒரு குடும்பத்தில் இருப்பவர்களைப் பிரிக்க வேண்டாம். மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள்  குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளேன்” எனப் பேசினார். 

Advertisment