பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் போட்டியிட, போட்டோ போட்டி போட்டு கொண்டு இரு கோஷ்டியினர் தலைமைக்கு மாறி மாறி புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக, பல்லாவரம் தொகுதியில் அதிமுக சார்பில் சீட் பெறுவதற்காக முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங், எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி வரும் நிலையில், "அவருக்கு சீட் வழங்க கூடாது" என குரோம்பேட்டை, திருநீர்மலை, பம்மல் , அஸ்தினாபுரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதி செயலாளர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். இதனால் பல்லாவரம் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எக்ஸ் எம்.எல்.ஏ. தன்சிங்க்கிற்கு ஆதரவான இடத்தில் அவரது எதிர்ப்பாளர்கள் நிகழ்ச்சி நடத்துவதும், எதிர்ப்பாளர்கள் இடங்களில் தன்சிங் நிகழ்ச்சி நடத்துவதும் போட்டோபோட்டி நடந்து கொண்டிருக்கிறது. பல்லாவரத்தில் வன்னியர் சமுதாய மக்கள் அதிக அளவில் வசிக்கும் நிலையில், இந்த முறை வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த நபருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் கட்சியின் ரத்தத்தின் ரத்தங்கள் மல்லுக்கட்டி கின்றனர். இந்த நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங்கிற்கு எதிராக பல்லாவரம் தொகுதியில் போட்டியிட பல அதிமுகவினர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
இதனால் இருதரப்பினரும் போட்டோ போட்டி போட்டு கொண்டு கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதால் முட்டல் மோதல்கள் அதிகரித்தப்படி இருக்கின்றன. தற்போது தன்சிங் எதிர்ப்பாளராக இருக்கும் பகுதி கழக செயலாளர், தன்சிங் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அவருடன் பயணித்துள்ளார். ஆனால், அவர்களின் மகன் ஜெயப்பிரகாஷ், பழைய ஆட்களை ஓரங்கட்டியுள்ளார். இதனால் கடுப்பில் இருந்த ரத்தத்தின் ரத்தங்கள் இம்முறை இவர்களுக்கு நிச்சயம் பாடம் புகட்ட வேண்டும் என தலைமையிடம் தொடர்ந்து போர்க் கொடித் தூக்கி வருகின்றனர் .
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/05/admk-hq-1-2026-03-05-10-00-55.jpg)
இந்த நிலையில், அதிமுகவில் அமைப்பு ரீதியாக 8 பகுதிகளாக உள்ள பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில், ஐந்து பகுதி கழகச் செயலாளர்கள் தான்சிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். "தன்சிங்கிற்கோ அல்லது தன்சிங் சார்ந்தவர்களுக்கோ இந்த முறை சீட்டு வழங்கினால் அவர்கள் நிச்சயம் மண்ணை கவ்வது உறுதி" என ரத்தத்தின் ரத்தங்கள் கொந்தளித்து வருகின்றனர். சமீபத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அஸ்தினாபுரத்தில், அதிமுகவினர் இரு தரப்பினரும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில், எதிர் எதிரே நலத்திட்ட உதவியை வழங்கியது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
'அதிமுக கட்சி ஒன்று ; நிகழ்ச்சி இரண்டா?' என பொதுமக்களே வியக்கும் அளவிற்கு அஸ்தினாபுரம் பகுதி கழகத்திற்கு எதிராக முன்னாள் தன்சிங் தரப்பினரும் போட்டி போட்டு நிகழ்ச்சி நடத்தியது வேடிக்கையாக அமைந்தது. ஏற்கனவே பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் சிறுபான்மையினர் ஓட்டு கணிசமாக உள்ள நிலையில் திமுக வுக்கு சாதகமாக உள்ளது. இந்த நிலையில், அதிமுகவில் ஒரு சில சமூகத்தினர் தன்சிங்கிற்கு சீட்டு வழங்குவதை எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த சமூக ஓட்டு மூலம் பாதிப்பு ஏற்படுவதால் அதிமுக இந்த முறை தேர்தலுக்கு முன்பே தோல்வி உறுதியாக எழுதப்பட்டு விட்டதாக அரசியல் விமர்சனங்களும் பகுதி வாழ் மக்களும் கூறுகின்றனர்
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/05/nda-alliance-1-2026-03-05-10-01-14.jpg)
முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக நடக்கும் இத்தகைய களேபரங்களை அறிந்த அதிமுக தலைமை, பல்லாவரம் தொகுதியை, தங்களின் கூட்டணி கட்சியான பாமக அல்லது பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யலாமா? எனவும் யோசித்து வருகிறதாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/03/05/dhanasing-ex-mla-2026-03-05-10-00-16.jpg)