அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான மைத்ரேயன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திமுகவில் இணைவதற்காக அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு அவர் வருகை தந்துள்ளார்.
கடந்த 1990களில் பாஜகவில் இருந்த மைத்ரேயன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதன் பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது, அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் அணியின் அதரவாளராக செயல்பட்டு வந்தார். இதனையடுத்து பா.ஜ.க.வில் இனைந்தார். அங்கு அவர் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து மைத்ரேயன் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி (12.09.2024) இணைத்துக் கொண்டார்.