அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சியின் சட்ட திட்ட விதிகள் 19 உட்பிரிவு 7 மற்றும் 25 உட்பிரிவு 2இன்படி, இன்று (10.12.2025) காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்து வருகிறார். முன்னதாக  அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்க உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில்  கூட்டத்தின் தொடக்கத்தின் போது, விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதைச் செலுதினார். அதே சமயம் அக்கட்சியின் அவைத் தலைவரும், இன்றைய கூட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டிய தமிழ்மகேன் உசேனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக செய்குழுவின் தற்காலிக அவைத் தலைவராக,  அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி நியமிக்கப்பட்டு செயற்குழு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு  தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.  

Advertisment

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம், கூட்டணி பேச்சுவார்த்தை, சட்டமன்ற தேர்தல் பணிகள், தேர்தல் கூட்டணி நிலைப்பாடு, திமுக அரசுக்கு எதிரான பரப்புரை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் கட்சி ஒருங்கிணைப்பு குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது.