சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (16.11.2025) நண்பகல் 01.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நாளை (17-11-2025) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதே சமயம் கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது ” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக எஸ்.ஐ.ஆர். (SIR) தொடர்பாக சென்னையில் நாளை நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாடம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஒத்திவைக்கப்பட்ட ஆர்ப்பாடம் நவம்பர் 20ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தி.மு.க.வினரால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்து, அதிமுக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில், 17.11.2025 (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளதால், இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு 20.11.2025 அன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி . லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்படுகிறது.
Follow Us