Advertisment

எந்த தொகுதியில் விஜய் போட்டி?; ஆதவ் அர்ஜுனா சொன்ன பரபரப்பு தகவல்!

aah

Adhav Arjuna informed Which constituency is Vijay contesting

சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதியின் தவெக செயல்வீரர்கள் பொதுக்கூட்டம் இன்று (22-02-26) நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisment

இந்த கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “திமுகவில் இருப்பது பொருந்தாத கூட்டணி. ஒரு தலைவரை நோக்கி தான் எப்போதும் தேர்தலே இருக்கும்.ரெண்டு தலைவருக்கு 75 வயது ஆகிவிட்டது. நம்ம தலைவருக்கு 51 வயது தான் ஆகியிருக்கிறது. அடுத்த 40 வருடம் ஆளக்கூடிய ஒரே தலைவர் நமது விஜய் தான். எந்த இடத்தில் வறுமை அதிகமாக இருக்கிறதோ? எந்த இடத்தில் ஏழ்மை அதிகமாக இருக்கிறதோ? எந்த இடத்தில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லையோ? எந்த இடத்தில் குடி பழக்கம் போதை பழக்கம் அதிகமாக இருக்கிறதோ? எந்த இடத்தில் வளர்ச்சி இல்லையோ? அந்த இடத்தில் தான் உறுப்பினராக அந்த இடத்தை சிங்கப்பூர் மாதிரி மாற்ற வேண்டும் என்று விஜய் அடிக்கடி சொல்வார்.

Advertisment

சென்னையில் அதிகமான வறுமை வட சென்னையில் இருக்கிறது. வட சென்னை என்றாலே ரவுடிசம் என்று திமுகவால் உருவாக்கப்பட்டது. தன்னுடைய தேர்தல் வேலைகளுக்காக அதை உருவாக்கினார்கள். ஆனால் நம்முடைய தலைவர் வளர்ச்சியை மட்டும் தான் உருவாக்குவார். நம்முடைய தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் நிற்க வேண்டும் என்று உங்கள் சார்பாக தீர்மானமாக முன்வைக்கிறேன். அதே மாதிரி அவர் கொளத்தூர் தொகுதியில் நிற்க வேண்டும் என்று நினைக்கிறேன், ஆர்.கே நகரில் நிற்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த 50, 60 வருடமாக இந்த வடசென்னையை திமுக ஒதுக்கியது. இந்த சூழ்ச்சியை தூக்கி எறியக்கூடிய ஒரே தலைவர் நம் விஜய் மட்டும் தான்” என்று கூறினார்.

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்த தீர்மானத்தை அனைவரும் ஏற்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவித்தார். 

tvk vijay tvk Aadhav Arjuna
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe