Advertisment

'தவிக்கவிட்டு தப்பி ஓடிவிட்டார் ஆதவ் அர்ஜுனா...'- நீதிமன்றத்தில் காவல்துறை வாதம்

04

'Adhav Arjuna escaped...' - Police argument in court Photograph: (tvk)

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் இன்று (05.11.2025) நடைபெற்றது. காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்று இந்த கூட்டத்தில் ஆதாவ் அர்ஜுனா பேசுகையில், ''நாங்க 41 உறவுகளை இழந்திருக்கோம். எங்களுக்கு தெரியும் அந்த வலி. ஒட்டுமொத்தமாக மாவட்டச் செயலாளர் மதி மேல தவறுன்னு சொன்னா அப்பறம் எதுக்கு முதலமைச்சர்னு ஒருத்தர் இருக்கீங்க. ஒரு இன்டெலிஜன்ஸ் எதற்கு இருக்கு. ஆதவ் அர்ஜுனா சாப்பிட்டாரா தூங்குறாரா என பார்ப்பதற்கா. இல்ல விஜய் வீட்ட விட்டு வெளியே வந்தாரான்னு பார்ப்பதற்கா. இன்டெலிஜன்ஸ் எதற்கு இருக்கு. ஒட்டுமொத்த காவல்துறையும் செயல் இழந்திருக்கு இன்னைக்கு. அதுல ஒருத்தர் நமக்கு அட்வைஸ் சொல்றாங்க கரூர் வந்து மோசமான ஏரியான்னு உங்களுக்கு தெரியாதா? அந்த செந்தில் பாலாஜி வந்து ஒரு ரவுடி உங்களுக்கு தெரியாதா? ஆறு மாசம் இருங்கடா யாரு ரவுடி யா யாரு தெரியும்டா? 30 நாள் அண்ணன் அமைதியா இருக்காருன்னு பாத்துட்டு இருக்கீங்களா? என ஆவேசமாக பேசினார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், 41 பேர் பலியான நிலையில் ஆதாவ் அர்ஜுனா தப்பித்து ஓடி விட்டார் என்ற வாதத்தை காவல்துறை வைத்துள்ளது. கரூர் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு பிறகு  ஆதாவ் அர்ஜுனா சமூகவலைத்தள பக்கத்தில் புரட்சி வெடிக்கும் என்ற ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். ஆனால் தொடர்ந்து அந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பதிவை நீக்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து ஆதாவ் அர்ஜுனா மீது காவல்துறை வழக்குபதிவு செய்திருந்தது.

இந்நிலையில் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஆதாவ் அர்ஜுனா தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கு சென்னை நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது  ஆதாவ் அர்ஜுனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு ஆஜராகி வாதங்களை வைத்தார்.

அவரது வாதத்தில், 'கரூர் சம்பவத்திற்கு பிறகு பதிவிட்ட அந்த பதிபு 34 நிமிடங்கள் மட்டுமே சமூக வலைத்தள பக்கதில் இருந்ததாகவும் இதனால் எந்த விதமான சட்ட ஒழுங்கு பிரச்சனையோ அல்லது எந்த விதமான சமூக பிரச்சனையும் ஏற்படவில்லை. சம்பந்தப்பட்ட பதிவை உடனே நீக்கி விட்டார்கள். அந்த பதிவில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும்'  என வாதிட்டார்.
Advertisment
ஆதாவ் அர்ஜுனா தரப்பை நோக்கிய நீதிபதி, 'நீங்கள் தான் பதிவிட்டீர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?' என கேள்வி எழுப்பினார். அதற்கு ஆம் என பதிலளித்த ஆதாவ் அர்ஜுனா தரப்பு, 'எந்தவித குற்றப் பின்னணியும் இல்லாத ஆதாவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. அப்பொழுது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, 'கரூர் சம்பவம் நடைபெற்ற பொழுது அங்கிருந்து ஆதாவ் அர்ஜுனா தலைமறைவாகிவிட்டார். அந்த சம்பவத்திற்கு அவரும் பொறுப்பாகிறார். தலைமறைவாகிவிட்டு அடுத்த நாள் இதுபோன்ற பதிவுகளை பதிவு செய்துள்ளது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு இருந்தது. பதிவை நீக்கிவிட்டாலும் கூட ஒரு லட்சம் பேர் அந்த  பதிவை பார்த்து விட்டனர். தவறான குறுஞ்செய்தியை பார்வர்ட் செய்தாலே குற்றம் என பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளது. எனவே இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்பக் கட்ட விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை' என வாதிட்டார்.

இரண்டு தரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை நாளை பிற்பகலுக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.
Advertisment
 
tvk vijay Aadhav Arjuna karur stampede
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe