Advertisment

“முதலமைச்சருக்குத் தெரியாதா?” - ஆதவ் அர்ஜுனா கேள்வி!

aadhav-arjuna-pm

த.வெ.க.வின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் செய்தியாளர்கள் திருத்தணி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.  அதற்கு அவர் அளித்த பேட்டியில், “தமிழகம் போதையில் எந்த அளவுக்கு அதிகமான பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டுள்ளது என்று தெரிகிறது. 16 வயதில் இருந்து இந்த போதை கலாச்சாரம் அதிகமாகிக் கொண்டே உள்ளது. முதலமைச்சர், இது தொடர்பாக டி.ஜி.பி., டெப்டி கமிஷனரை நியமித்தேன் என்று சொல்கிறார். 2 வருடத்திற்கு முன்னாள் முதலமைச்சர் பெரிய ஆலோசனை நடத்தி இருந்தார். 

Advertisment

அது ஒரு போட்டோஷூட் மாதிரி இருந்தது. அந்த போட்டோஷூட் எல்லாம் நிறுத்திவிட்டு ஒட்டுமொத்த இளைஞர்கள் கூட்டமும் முக்கியமாகப் பள்ளிக் கல்வித்துறையில் இருந்தே இந்த பிரச்சினைகள் அதிகமாக இருந்து கொண்டே இருக்கிறது. இந்த போதை பழக்கம் தான் இன்றைக்கு சமூக வலைத்தளத்தில் ஒரு கொலையைக் கூடச் செய்யக்கூடிய அளவுக்கு ஒரு கலாச்சாரமா மாறிக் கொண்டு உள்ளது. போதைப் பொருட்களை விற்கக் கூடியவர்கள் இதுவரைக்கும் யாரும் கைது செய்யப்படவே இல்லை. இதற்குள் அரசியல் இருக்கிறதா?. இல்லை ஆளுங்கட்சி பிரமுகர்கள் இருக்கிறார்களா? என எதுவுமே தெரியவில்லை. 

Advertisment

காவல்துறையினர் இதுவரைக்கும் யாரையும் கைது செய்யாமல் இதனை யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களை மட்டுமே கைது செய்துள்ளனர். இதை விற்பவர்கள் யார்?. அரசியல்வாதிக்குத் தெரியாதா?. எம்.எல்.ஏ.வுக்கு தெரியாதா?. எம்.பி.க்கு தெரியாதா?. முதலமைச்சருக்குத் தெரியாதா?. ஒரு சாதாரண திமுகவில் உள்ள எம்.எல்.ஏ.வுக்கு ஒவ்வொரு தெருவில் என்ன நடக்கிறது என்று தெரிகிறது. அப்படி என்றால் போதைப் பொருள் எங்கெங்கே விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி பக்கத்தில் விற்கிறார்களா? இல்லை தெருவுக்குத் தெரு விற்கிறார்களா? என்று ஒரு ஆளுங்கட்சிக்குத் தெரியாதா?” எனக் கேள்வி எழுப்பினார். 

Aadhav Arjuna chief minister Tamilaga Vettri Kazhagam Thiruttani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe