தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் பாரப்பத்தி பகுதியில் நடைபெற்றது. மாநாட்டில் பேசியிருந்த நடிகர் விஜய் திமுக, பாஜக, அதிமுக மீது விமர்சனங்களை வைத்திருந்தார். அதிலும் முதல்வர் குறித்து பேசுகையில் 'அங்கிள்... அங்கிள்...' என குறிப்பிட்டு பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதேபோல் கட்சியின் நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா பேசுகையில், 'இந்த மாநாட்டை நடத்துவதற்கு பல நெருக்கடிகள் வந்தது. குறிப்பாக மதுரையைச் சேர்ந்த அமைச்சர் மூர்த்தி தரப்பிலிருந்து பல்வேறு இடையூறுகள், நெருக்கடிகள் வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதியில் திமுக இளைஞர் அணி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. 'வாட் ப்ரோ; ஓவர் ப்ரோ; அடக்கி வாசிங்க ப்ரோ' என்ற வாசகம் இடம்பெற்ற போஸ்டர்கள் மதுரை மாநகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆதரவாளர்கள் சார்பில் இந்த பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.