நடிகரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் (உரிமையியல்) வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், “சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம் எனது புகைப்படம், பெயர், உலக நாயகன் என்ற பட்டத்தையும், எனது பிரபல வசனத்தையும் எனது அனுமதி இன்றி பயன்படுத்தி டீஷர்ட்ட்களையும், ஷர்ட்ட்களையும் வணிக ரீதியாக விற்பனை செய்து வருகிறது. இதற்குத் தடை விதிக்க வேண்டும். 

Advertisment

அதோடு, ‘நீயே விடை’ என்ற நிறுவனம் மட்டுமில்லாமல் வேறு எந்த நிறுவனங்களும் என்னுடைய பெயர், புகைப்படம், பட்டங்களையும், வசனங்களையும் பயன்படுத்தத் தடைவிதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை (12.01.2026)  விசாரணைக்கு வர உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதேபோன்று இசையமைப்பாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இது தொடர்பாகத் தடை உத்தரவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment