மலையாள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டது அவடே தேசத்திலே பரபரப்பாக பேசப்படுகிறது 2017இல் மலையாள நடிகை சூட்டிங்கிற்காக திருச்சூரிலிருந்து கொச்சிக்கு கார்ல வந்து கொண்டிருந்த போது, அவர வழிமறித்த பல்சர் சுனில் தரப்பிலான 6 பேர் நடிகையைக் கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் 8வது குற்றவாளியான நடிகர் திலீப் மீது 120(B) கான்ஸ்பிரசி எனப்படுகிற சதித்திட்டம் அவரும், பல்சர் சுனிலாலும் தீட்டப்பட்டதான செக்ஷனில் கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தார்கள்.

Advertisment

இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையின் போது, நடிகைகளான பாமா, பிந்துபணிக்கர் உள்ளிட்ட 104 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினார்கள். ஆனால் செக்ஷன் 120(B) போலீசுக்குப் பெரிய சவாலாக இருந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்து இந்த வழக்கில், ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் இரண்டு பேர், வழக்கு போகிற போக்கைப் பார்த்து முடியாது என்று வழக்கில் இருந்து ஒதுங்கினார்கள். ஆலுவா குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை பின்பு, எர்ணாகுளம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு 8 வருடமாக நடந்து வந்தது.

Advertisment

இந்த நிலையில், டிசம்பர் 08 அன்று செஷன்ஸ் நீதிபதி ஹனி எம்.வர்கீஸ் தீர்ப்பை வாசித்துள்ளார். இந்த வழக்கில், நடிகர் திலீப் சதித் திட்டம் தீட்டியதாக போலீசாரால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவில்லை என்று கூறி, அவரை விடுவித்து உத்தரவிட்டார். மேலும், ஏ1 குற்றவாளி பல்சர் சுனில் முதல் ஏ6 வரையிலான குற்றவாளிகள் சம்பவ இடத்தில் இருந்தது நிரூபணமானதால் அவர்கள் 6 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார்.

பொதுவாக சதித்திட்டம் 120(B) கான்ஸ்பிரசி செக்ஷன் வழக்கில் எதிரிகளோடு சதிச் செயல்களை, ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பது சிரமம் என்று கூறப்படுகிறது. சில வழக்கில் இது சுலபமாக நடந்திருக்கலாம். ஆனால், பெரும்பாலும் குறிப்பாக கடைந்தெடுத்த குற்றவாளியான பல்சர் சுனிலுக்கும், திலீப்பிற்குமிடையே நடத்தப்பட்ட சதித்திட்டத்தை, வழக்குப் பதிவு செய்த போலீசாரால் நிரூபிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அவர் சொல்லித்தான் நான் பண்ணேன்னு ஆதாரப்பூர்வமான வார்த்தைகளை பல்சர் சுனிலிடம் இருந்து போலீசாரால் வாக்குமூலமாக்கூட வாங்க முடியவில்லை. இது தான் நடிகர் திலீப்பிறகு ஆதரவாகப் போனதால் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் கேரளவாசிகளுக்கு இதன் உள்விஷயம் அனைத்து அத்துப்படியாக தெரிந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.

Advertisment

வரப்போகிற தேர்தலில், இந்த வழக்கு தங்களுக்கெதிரான ஆயுதமாக மாறிடக்கூடாது என்ற திட்டத்தில் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சியான அரசுத் தரப்பு, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக கேரள சட்டத்துறை அமைச்சர் ராஜீவ் கூறியுள்ளார்.